YouTurn

ராஜஸ்தான் முதல்வர் கிரிக்கெட் விளையாடும் போது விழுந்ததாகப் பரவும் ஒரிசா எம்எல்ஏ வீடியோ !

ராஜஸ்தான் முதல்வர் கிரிக்கெட் விளையாடும் போது விழுந்ததாகப் பரவும் ஒரிசா எம்எல்ஏ வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

இவர்தான் ராஜஸ்தானை தூக்கி நிறுத்தப்போகும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லாலும், அவரது அற்புதமான ஷாட்டும்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா கிரிக்கெட் விளையாடும் போது கீழே விழுந்ததாகக் கூறி 12 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் பரவி வரும் பதிவுகளில் "இவர்தான்.. ராஜஸ்தானை தூக்கி நிறுத்தப்போகும் ராஜஸ்தான் முதல்வர் பஜன் லாலும், அவரது அற்புதமான கிரிக்கெட் ஷாட்டும்" என்று நையாண்டியாகக் குறிப்பிடப்பட்டிருப்பத்தையும் காண முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா அல்ல என்பதை அறிய முடிந்தது.

இந்த வீடியோ குறித்து ஒடிசா ஊடகமான Kanak News கடந்த டிசம்பர் 25 அன்று தனது யூடியூப் பக்கத்தில், பிஜேடி எம்எல்ஏ பூபிந்தர் சிங் நார்லாவில் தனது கிரிக்கெட் திறமையை சோதித்து பார்த்தபோது காயமடைந்தார் என்று குறிப்பிட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தது.



The Week வெளியிட்டுள்ள செய்தியிலும், "ஒடிசாவைச் சேர்ந்த பிஜேடி எம்.எல்.ஏ பூபிந்தர் சிங், காலாஹண்டி மாவட்டத்தின் பெல்கண்டியில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியைத் துவக்கிவைத்த பொழுது, கிரிக்கெட் ஆடுகளத்தில் தவறி விழுந்து காயமடைந்தார். அவர் தலையில் காயம் ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.





இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் இருப்பது ராஜஸ்தான் முதல்வர் பஜன்லால் சர்மா அல்ல என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: ராஜஸ்தான் முதல்வர் பிரச்சாரத்தில் மக்கள் ‘மோடி மோடி’ என கோசமிட்டதாக எடிட் செய்த வீடியோவைப் பரப்பிய அசாம் முதல்வர்

முடிவு:

நம் தேடலில், ராஜஸ்தான் முதல்வர் கிரிக்கெட் விளையாடும் போது விழுந்ததாகப் பரவும் தகவல்கள் தவறானவை என்பதையும், வீடியோவில் இருப்பது ஒடிசாவைச் சேர்ந்த பிஜேடி எம்.எல்.ஏ-வான பூபிந்தர் சிங் என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க