YouTurn

ராகுல் காந்தி வெளிநாடுகளில் 'ராகுல் ராஜீவ் பெஃரோஸ்' என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !

ராகுல் காந்தி வெளிநாடுகளில் 'ராகுல் ராஜீவ் பெஃரோஸ்' என்ற பெயரைப் பயன்படுத்துவதாகப் பாஜகவினர் பரப்பும் எடிட் படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நம்ம வூர்லதான் காந்தி வேசம்! வெளி நாடு வந்தா ராகுல் ராஜிவ் பெஃரோஸ்னு ஒரிஜினல் பேர்தான் வச்சிப்பாரு நம்ம பப்பு இவர்களின் வரலாறு இதுவே.



Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

ந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி இந்தியாவில் இருக்கும் போது மட்டும் காந்தி பெயரைப் பயன்படுத்துவதாகவும், வெளிநாட்டிற்கு சென்றால் ராகுல் ராஜீவ் பெஃரோஸ் என்ற பெயரைப் பயன்படுத்துவதாக இப்புகைப்படத்தை தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் வைரல் செய்து வருகின்றனர்.





உண்மை என்ன ? 

மார்ச் 3ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "Learning To Listen In 21st Century " எனும் தலைப்பில் தன்னுடைய விரிவுரையை ஆற்றினார். அவரின் பேச்சை விமர்சித்து டைம்ஸ் நவ் வெளியிட்ட வீடியோவில் 4.12வது நிமிடத்தில் வைரல் செய்யப்படும் புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



ஆனால், ராகுல் காந்தி முன்பாக உள்ள அட்டையில் பெயர் ஏதும் இல்லாமல் வெள்ளையாக மட்டுமே இருப்பதை பார்க்க முடிந்தது.

மேற்கொண்டு வைரல் படத்தை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்கையில், மார்ச் 1ம் தேதி சாம் பிட்ரோடா எனும் ட்விட்டர் பக்கத்தில், "கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய விரிவுரையின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் " எனக் கூறி பதிவிடப்பட்டு உள்ளது. இப்பதிவில் ராகுல் காந்தியின் உண்மையான புகைப்படம் இடம்பெற்று இருக்கிறது.



Twitter link | Archive link 

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் ராகுல் காந்தி ஆற்றிய விரிவுரையின் போது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் அவருக்கு முன்பாக பெயர் பலகை இல்லை, அங்கிருந்த வெள்ளை அட்டையில் ராகுல் ராஜீவ் பெஃரோஸ் என போலியாக எடிட் செய்து பரப்பி உள்ளனர்.



மேலும் படிக்க : மோடி ஆவணப்படம் வெளியாவதற்கு முன்பாக பிபிசி தயாரிப்பாளரை ராகுல் காந்தி சந்தித்ததாகப் பரவும் வதந்தி !

மேலும் படிக்க : ராகுல் காந்தி மது அருந்துவது போல் தவறாக பரப்பப்படும் எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

இதற்கு முன்பாக ராகுல் காந்தி குறித்து பரப்பப்பட்ட பல்வேறு வதந்தி பதிவுகளின் உண்மைத்தன்மை குறித்து கட்டுரைகளை வெளியிட்டு இருக்கிறோம்.

முடிவு : 

நம் தேடலில், ராகுல் காந்தி வெளிநாடுகளில் தன் பெயரை ராகுல் ராஜீவ் பெஃரோஸ் எனப் பயன்படுத்தி வருவதாகப் பரப்பப்படும் புகைப்படம் போலியாக எடிட் செய்யபட்டது  என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க