YouTurn

ராகுல்காந்தி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதா? உண்மையை திரித்துப் பரப்பும் பாஜகவினர்!

ராகுல்காந்தி மீது போக்சோ வழக்கு பதியப்பட்டுள்ளதா? உண்மையை திரித்துப் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

ராகுல் காந்தி மீது போக்சோ வழக்கு உள்ளது.!! பெண் குழந்தைகள் வைத்திருப்போர் ஜாக்கிரதை..



X Link | Archive Link

விரிவான விளக்கம்

மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று தொடங்கி ஜூன் 1 வரை மொத்தம் ஏழு கட்டங்களாக இந்தியாவில் நடைபெறவுள்ளது. இதில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. 

மேலும் வேட்பாளர்கள் தங்களது சொத்து மதிப்பு விவரங்கள், குற்ற விவரங்கள் உட்பட மற்ற விவரங்களையும் வேட்புமனு தாக்கலின் போதே தேர்தல் ஆணையத்திடம் சமர்பிக்க வேண்டியது இன்றியமையாத ஒன்றாகும். இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது போக்சோ வழக்கு உள்ளதாகக் கூறி பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்றை வைரலாகப் பரப்பி வருகின்றனர். 

அந்த புகைப்படத்தில் கேரளாவின் வயநாடு தொகுதியில் போட்டியிடும்  ராகுல்காந்தி மீது “SS. 228A IPC, SS. 23(4) POCSO மற்றும் SS. 74 Juvenile Justice Act” ஆகிய குற்ற வழங்குகள் உள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளதையும் காண முடிகிறது.



உண்மை என்ன?

பரவி வரும் செய்திகளின் உண்மை தன்மையை அறிய வேட்புமனு தாக்கலின் போது தேர்தல் ஆணையத்திடம் ராகுல் சாந்தி சமர்பித்துள்ள உறுதிமொழி பத்திரத்தை (Affidavit) ஆய்வு செய்து பார்த்தோம். 

அதில், “வேட்பாளரின் ட்விட்டர் பக்கத்தில் பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட மைனர் சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதாகக் கூறப்படுகிறது” என்று குறிப்பிட்டு, அவர் மீது “SS. 228A IPC, SS. 23(4) POCSO மற்றும் SS. 74 Juvenile Justice Act” ஆகிய குற்ற வழங்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காண முடிந்தது.



எனவே இது தொடர்பாக மேலும் தேடியதில், 2024 ஜனவரி 24 அன்று LiveLaw இணையதளத்தில் “பாலியல் வன்புணர்வால் பாதிக்கப்பட்ட சிறுமியின் அடையாளத்தை வெளியிடும் ட்வீட்டை நீக்கி விட்டோம்: டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராகுல் காந்தி“ என்ற தலைப்பில் வெளியிட்டிருந்த கட்டுரையை காண முடிந்தது. 

அதில் “2021 ஆம் ஆண்டு டெல்லி கண்டோன்மென்ட் பகுதியில் உள்ள தகன அறைக்குள் ஒன்பது வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். ராகுல் காந்தி அந்த சிறுமியின் குடும்பத்தை சந்தித்து ஒரு புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டார்.

இந்திய தண்டனைச் சட்டம், 1860 மற்றும் POCSO சட்டம், 2015 ஆகியவற்றின் கீழ் தொடர்புடைய குற்றங்களின் கீழ் ஆகஸ்ட் 2021 இல் ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது, இந்த விசாரணை நிலுவையில் உள்ளது, குற்றச்சாட்டுகளும் இன்னும் நிலுவையில் உள்ளன என்று தில்லி காவல்துறையால் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.



இதன் மூலம் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மைனர் சிறுமியின் பெற்றோரை சந்தித்து, அந்த சிறுமியின் இறப்பிற்கு நியாயம் கேட்கும் விதமாக சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் ராகுல் காந்தி 2021 இல் பதிவிட்டு உள்ளார் என்பதையும்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோரின் அடையாளத்தை வெளிப்படுத்தியதற்காக ராகுல் காந்தி மீது POCSO சட்டத்தின் பிரிவில் ஒர் வழக்கு பதியப்பட்டுள்ளது, அதுவே அவரது  Affidavit-ல் கூறப்பட்டுள்ளது என்பதையும் தெளிவாக அறிய முடிகிறது.  ஆனால், இதை சமூக ஊடகங்களில் சிலர் தவறாக திரித்து பரப்பி வருகின்றனர்.

முடிவு:

நம் தேடலில், ராகுல் காந்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட மைனர் சிறுமியின் இறப்பிற்கு நியாயம் கேட்கும் வகையில், சிறுமியின் பெற்றோரை சந்தித்த புகைப்படங்களை சமுக வலைதளத்தில் பதிவு செய்ததற்காகவே அவர் மீது போக்சோ வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை தெளிவாக அறிய முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க