YouTurn

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ராகுல் காந்தி?

யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டாரா ராகுல் காந்தி?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ராகுல் காந்தியுடன் இருப்பது முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வும், தற்போதைய உத்தரப் பிரதேச பாஜக எம்.எல்.ஏ.வுமான அதிதி சிங் ஆகும். இந்த புகைப்படத்தை டிஜிட்டல் மூலம் மாற்றியமைக்கப்பட்டு, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ரா என்று தவறாக பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

ஹரியானாவிலிருந்து பாகிஸ்தானுக்காக உளவு பார்த்ததாக பிடிபட்ட ஜோதி மல்ஹோத்ரா, ராகுல் காந்தியுடன் இருக்கிறார். ஒவ்வொரு துரோகியும், தேச விரோதியும் ராகுல் காந்தியுடன் காணப்படுவது என்ன ஒரு விசித்திரமான தற்செயல் நிகழ்வு நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு ராகுல் காந்தி மூளையாக செயல்படுகிறாரா?

image.png

Archived Link

விரிவான விளக்கம்

ஹரியானா மாநிலம், ஹிசார் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜோதி மல்ஹோத்ரா. யூடியூப்பில், டிராவல் வித் ஜோ என்ற பெயரில் பயண சேனல் நடத்தி வரும் இவரை, பாகிஸ்தானுக்காக உளவுபார்த்த குற்றச்சாட்டில் ஹரியானா காவல்துறையினர் கைது செய்தனர். 

இந்நிலையில் அவருடன் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புகைப்படம் எடுத்துக்கொண்டது போல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் இமேஜ் குறித்து, ராகுள் காந்தியின் சமூகவலதளப்பக்கங்களில் தேடிப் பார்த்தோம். அப்போது அந்த புகைப்படம் குறித்த எதுவும் பதிவிட்டிருப்பதாகத் தெரியவில்லை. 


அந்த புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது நவம்பர் 27, 2019 அன்று Deccan Herald வெளியிட்ட செய்தியைப் பார்க்க முடிந்தது. அதில் பரவி வரும் புகைப்படம் போல் ஒரு புகைப்படம் இருந்தது. இது குறித்து அந்த செய்தியில் பார்த்த போது, அதில் ராகுல் காந்தியிடம் இருப்பது முன்னாள் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரும், தற்போதைய உத்தரப் பிரதேச பாஜக சட்டமன்ற உறுப்பினருமான அதிதி சிங் என்பது தெரியவந்தது. 

இதையடுத்து அந்த புகைப்படத்தில் அதிதி சிங்கிற்குப் பதிலாக, யூடியூபர் ஜோதி மல்ஹோத்ராவை டிஜிட்டல் முறையில் மாற்றியமைக்கப்பட்டது தெரியவந்தது. 


இதையடுத்து இரண்டாவது புகைப்படம் குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது ராகுல் காந்தியின் முகநூல் பக்கத்தில் செப்டம்பர் 18, 2022 அன்று இந்த புகைப்படம் பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது. அதனுடன் மேலும் ஒன்பது புகைப்படங்களும் இடம்பெற்றிருந்தன.


மேலும் இது குறித்துத் தேடிய போது, செப்டம்பர் 18, 2022 அன்று Social News XYZ என்ற இணையதளப்பக்கத்தில் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் கேரளாவின் ஆலப்புழாவில் Bharat Jodo Yatravவின் போது, தனது ஆதரவாளர்களை அரவணைத்த போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்று கூறப்பட்டிருந்தது. 

image.png


முடிவு : 

நம் தேடலில், முதல் புகைப்படம் 2019ஆம் ஆண்டு அதிதி சிங் உடன் ராகுல் காந்தி எடுத்த புகைப்படத்தை, டிஜிட்டல் முறையில் மாற்றியமைத்து தவறாகப் பரப்புகின்றனர். இரண்டாவது புகைப்படம் 2022ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது எடுக்கப்பட்டதாகும். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க