யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு.. அது என்னனா....."பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது" - இப்படிக்கு வடமாநில ஸ்டாலின்

விரிவான விளக்கம்
ராகுல் காந்தி நிகழ்ச்சி ஒன்றில் பேசும் போது, பணத்தை அச்சடித்து எல்லாருக்கும் கொடுப்பதினால் நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையின்மை போன்ற பிரச்சனைகளை சரிசெய்ய முடியுமெனக் கூறியதாக வீடியோ ஒன்று பாஜகவினரால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ குறித்துத் தேடியதில், இது ராகுல் காந்தி உத்தரப் பிரதேசம் மாநிலம் ரேபரலி மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது எடுக்கப்பட்ட வீடியோ என்பதை அறிய முடிந்தது.
இக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய முழு வீடியோ கடந்த (மே) 13ம் தேதி இந்தியத் தேசிய காங்கிரசின் அதிகாரப் பூர்வ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
ராகுல் இந்தியில் பேசியதை மொழி பெயர்த்ததில், பணத்தை அச்சடித்துக் கொடுப்போம் என அவர் சொன்னதாகப் பரவும் தகவல் பொய் என்பதை அறிய முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் 'மகாலட்சுமி' என்கிற திட்டம் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஓர் ஆண்டுக்கு ரூ.1 லட்சம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது (மாதம் ரூ.8,500). இத்திட்டம் காங்கிரசின் தேர்தல் அறிக்கையில் முக்கியமான வாக்குறுதியாகக் கருதப்படுகிறது.
இத்திட்டம் குறித்து ராகுல் காந்தி பேசுகையில், நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மகளிருக்கு மாதம் மாதம் பணம் வழங்குவோம். அதனை கொண்டு நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை வாங்குவீர்கள். அப்படி வாங்குவதால் கம்பெனிகள் உற்பத்தியை அதிகரிக்க நேரிடும். இதன் மூலம் வேலைவாய்ப்பு ஏற்பட்டு அப்பகுதியினருக்கு வேலை கிடைக்கும். இதன் தொடர்ச்சியாக மக்களின் வாழ்க்கைத்தரம் உயரும் எனக் கூறியுள்ளார்.
அவர் எந்த ஒரு இடத்திலும் பணத்தை அச்சடித்து வழங்குவதன் மூலம் வறுமை, வேலையின்மை பிரச்சனைகளைச் சரி செய்து விடலாம் எனக் கூறவில்லை.
முடிவு:
வறுமை, வேலையின்மை பிரச்சனையைச் சரி செய்யப் பணம் அச்சடிக்கப்பட்டு அனைவருக்கும் வழங்கப்படுமென ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல.
நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..
அது என்னனா....."பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது"
- இப்படிக்கு வடமாநில ஸ்டாலின் pic.twitter.com/JOhCuPkTWJ
— Praveen Kumar G.L(மோடியின் குடும்பம்) (@praveen_kgl) May 20, 2024
நாட்டின் பணவீக்கம், வறுமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்றவையை சரிசெய்ய என்கிட்ட ஒரு ஐடியா இருக்கு..
அது என்னனா....."பணத்த அச்சடிச்சு எல்லாருக்கும் கொடுக்கிறது"
- வடமாநில ஸ்டாலின்#BJP #EbrahimRaisí pic.twitter.com/UAUTMmcCCR
— மத்தியப் பாம்பு (WAR ROOM: ASSASSINATOR ) (@snakiee_2026) May 20, 2024