YouTurn

பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !

பூரி ஜெகன்நாதர் யாத்திரை கூட்டத்தின் படத்தை அயோத்தி எனப் பதிவிட்ட பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

அயோத்தியில் 7.5 கிமீக்கு மக்கள் வெள்ளம்.. இது ஜனவரி 22, 2024 அன்று மாலை 6 மணிக்கு எடுக்கப்பட்டது.

X Link | Archive Link

விரிவான விளக்கம்

யோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா, நேற்று (ஜனவரி 22) பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில் அயோத்தியில் 7.5 கிமீ தொலைவுக்கு மக்கள் வெள்ளம் குவிந்துள்ளதைப் பாருங்கள் என்று கூறி புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

இந்த புகைப்படத்தை பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட வலதுசாரிகள் பலரும் தங்களது பக்கங்களில் வைரலாகப் பரப்பி வருவதையும் காண முடிகிறது.



Archive link



உண்மை என்ன?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது அயோத்தியில் எடுக்கப்பட்ட புகைப்படம் அல்ல என்பதையும், இந்த புகைப்படத்தில் உள்ள காட்சிகளைக் கொண்ட வீடியோ, கடந்த 2023 ஜூன் மாதத்திலிருந்தே இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதையும் அறிய முடிந்தது.



மேலும், NDTV இன் இணையதளத்தில் பரவி வரும் இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்று குறிப்பிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. ஒரிசா மாநிலம் பூரியில் நடைபெறும் இந்த ஜெகன்நாத் ரத யாத்திரை குறித்து தேடியதில், ஒவ்வொரு ஆண்டும் ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஜெகன்நாத் ரத யாத்திரை நடைபெறுகிறது.



இதே போன்று The Shillong Times என்ற வலைத்தளப்பக்கத்திலும், இதே புகைப்படம் "ஜெகன்நாத் ரத யாத்திரை" என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.



மேலும் படிக்க: ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு வதந்திகள் மூலமாக அரசியல் செய்யும் தலைவர்கள் !

முடிவு:

நம் தேடலில், ஒரிசாவில் அமைந்துள்ள பூரி ஜெகன்நாதர் கோயில் கூட்டத்தை, அயோத்திக்கு வந்த கூட்டம் என்று கூறி பாஜகவின் இராம ஸ்ரீநிவாசன் உட்பட பலரும் தவறாகப் பரப்பி வந்துள்ளனர் என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க