YouTurn

அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசு தலைவர் என்று பரவும் AI வீடியோ!

அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்த குடியரசு தலைவர் என்று பரவும் AI வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

#Bjp #சமூகநீதி

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் காலில் விழுந்து வணங்கிய  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு என்று வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

முதலில் பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது prokerala. Com என்ற ஊடகப்பக்கத்தில் ஜூன் 23,2025 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதில் பரவி வரும் வீடியோவில் உள்ள புகைப்படம் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது.

image.png


அதே போல் ”Operation Sindoor met all objectives, instilled fear in terrorists, says Rajnath Singh” என்ற தலைப்பில் The Hindu ஊடகத்தில் செய்தி வெளியாகியிருந்தது. புது டெல்லியில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வழங்குகிறார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அதிலும்  பரவி வரும் வீடியோவில் உள்ள அதே புகைப்படம் இடம்பெற்றிருந்தது. 

image.png


எனவே பரவி வருவது  "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம் என்பது தெளிவானது. 


இதையடுத்து பரவி வரும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததை அடுத்து, was it ai என்ற இணையதளப்பக்கத்தில் இது AI மூலம் உருவாக்கப்பட்ட வீடியோவா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பரவி வரும் வீடியோ AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது. 


முடிவு: 

நம் தேடலில், ஜூன் 23, 2025 அன்று குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம், ஒன்றிய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், "Wings to Our Hopes (Volume-II)" என்ற புத்தகத்தின் முதல் பிரதியை வழங்கியபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை AI தொழில்நுட்பம் மூலம் எடிட் செய்து தவறாகப் பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க