யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
பரவிய செய்தி
நடிகையும், ஐபிஎல் கிரிக்கெட் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முதலாளியுமான ப்ரீத்தி ஜிந்தா வங்கியில் வாங்கிய 18 கோடி ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்று ஒன்றிய அரசு அவரது வங்கிக்கடனை தள்ளுபடி செய்து விட்டது.

விரிவான விளக்கம்
நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடக பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் புகைப்படம் ஒன்று வைரலாகப் பரவி வருகிறது.
இதனை கேரள காங்கிரஸ் உட்பட பலரும் , “அந்த வங்கி கடந்த வாரம் நிதி நெருக்கடியில் சிக்கியது. முதலீட்டாளர்கள் தற்போது தங்கள் பணத்திற்காக வீதிகளில் நிற்கிறார்கள்” என்றும் குறிப்பிட்டு பரப்பி வருகின்றனர்.
She gave her social media accounts to BJP and got 18 Cr written off and the bank collapsed last week.
Depositors are on the streets for their money. pic.twitter.com/UnEMMUgslY
நடிகையும், ஐபிஎல் கிரிக்கெட் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் முதலாளியுமான ப்ரீத்தி ஜிந்தா வங்கியில் வாங்கிய 18 கோடி ரூபாயை திருப்பித் தரத் தேவையில்லை என்று ஒன்றிய அரசு வங்கி தள்ளுபடி செய்து விட்டது.
Kings eleven IPL teamஐ 659 கோடி ரூபாய் கொடுத்து ப்ரீத்தி ஜிந்தா வாங்கியது pic.twitter.com/HtyUWqGPP2
உண்மை என்ன?
பரவி வரும் செய்திகள் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இது குறித்து முப்பை மாநகர காவல் துறையின் பொருளாதார குற்றப்பிரிவு தரப்பிலிருந்து அளிக்கப்பட்டுள்ள விளக்கம் குறித்து “Abp Live News” பிப்ரவரி 25 அன்று செய்தி வெளியிட்டிருந்தது. அதில், “நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் பெயர் தற்போதைய எந்த விசாரணைகளிலும் இடம்பெறவில்லை என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. ப்ரீத்தி ஜிந்தா தொடர்பாக எங்களுக்கு எந்த புகாரும் வரவில்லை. மேலும் அவரது வழக்கு தற்போது நடந்து வரும் விசாரணையின் ஒரு பகுதியாகவும் இல்லை” என்றும் கூறியுள்ளனர்.

இதே போன்று நடிகை ப்ரீத்தி ஜிந்தா தனது ட்விட்டர் பக்கத்தில், இது குறித்து கூறுகையில், “இல்லை, எனது சமூக ஊடக கணக்குகளை நானே இயக்குகிறேன், போலி செய்திகளை வெளியிட்டதற்காக உங்களைப் பார்த்து வெட்கப்படுகிறேன்! யாரும் எனக்காக எதையும் அல்லது எந்த கடனையும் தள்ளுபடி செய்யவில்லை.
இங்கு ஒரு தகவலைப் பதிவு செய்ய விரும்புகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு கடன் வாங்கப்பட்டு முழுமையாகத் திருப்பிச் செலுத்தப்பட்டது. இந்த தகவல் எதிர்காலத்தில் தவறான புரிதல் ஏற்படாமல் இருக்கவும் மற்றவர்களுக்குத் தெளிவுபடுத்தவும் உதவும் என்று நம்புகிறேன்” என்று கூறி தனது மறுப்பை தெரிவித்துள்ளார்.
No I operate my social media accounts my self and shame on you for promoting FAKE NEWS ! No one wrote off anything or any loan for me. I’m shocked that a political party or their representative is promoting fake news & indulging in vile gossip & click baits using my name &… https://t.co/cdnEvqnkYx
இதன் மூலம் நடிகை ப்ரீத்தி ஜிந்தா, தன்னுடைய சமூக ஊடகப் பக்கத்தை நிர்வகிக்கும் பொறுப்பை பாஜகவுக்கு கொடுத்ததன் மூலம், நியூ இந்தியா கோஆப்ரேட்டிவ் வங்கியிலிருந்து அவர் பெற்ற 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்தது என்று கூறி சமூக ஊடகங்களில் பரவும் செய்திகள் தவறானவை என்பது உறுதியாகிறது.
முடிவு:
நம் தேடலில், நடிகை ப்ரீத்தி ஜிந்தாவின் 18 கோடி ரூபாய் கடனை ஒன்றிய அரசு தள்ளுபடி செய்ததாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.