யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
கடந்த 2018-ல் இருந்தே முன்னாள் குடியரசுத் தலைவர்கள் பிரணாப் முகர்ஜி மற்றும் பிரதீபா பாட்டீல் இருவருமே பிரதமர் மோடியின் நிர்வாகத்தைப் பாராட்டியதாகக் கூறி இந்த செய்தி சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது.
பரவிய செய்தி
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், மோடி குறித்து பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.

விரிவான விளக்கம்
முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், பிரதமர் மோடி குறித்து ஒரு பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளதாக புகைப்படம் ஒன்று பரப்பப்படுகிறது. அதில் நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும், இன்று இந்தியாவின் சமூக சேவகியாக, இந்தியாவை நல்ல தேசமாக மாற்றக்கூடிய ஒரே நபர் நரேந்திர மோடிதான் என்பதை மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன் என்று கூறுகிறார். மேலும் அதில் மோடி ஜி இந்திய நாட்டிற்கு ஒரு புதிய திசையை வழங்கியுள்ளார் என்றும், அவரை போன்ற ஒரு தலைவரை நான் பார்த்ததில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் குடியரசுத் தலைவர்பிரதிபா பாட்டீல், மோடி குறித்து பெரிய அறிக்கையை வெளியிட்டுள்ளார்.நான் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவளாக இருந்தாலும், இன்று இந்தியாவின் சமூக சேவகியாக, இந்தியாவை நல்ல தேசமாக மாற்றக்கூடிய ஒரே நபர் நரேந்திர மோடிதான் என்பதை மக்களுக்குச் சொல்ல விரும்புகிறேன்.🇮🇳 pic.twitter.com/ytkkPvpahn
உண்மை என்ன?
இந்த அறிக்கை குறித்து keywords மூலம் கூகுளில் தேடிப் பார்த்தோம். அப்போது இது தொடர்பான எந்த செய்தியும் வெளியானதைப் பார்க்கமுடியவில்லை. இது குறித்து வேறு எதாவது தகவல் கிடைக்குமா என்பது குறித்துத் தேடிப் பார்த்தோம். அப்போது பிரதீபா பாட்டீல், பிரதமர் மோடி பாராட்டியதாக ந்க்ஸ் பக்கத்தில் 2018ஆம் ஆண்டே பதிவிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.
Babuji says-
“I have never seen since 71 years in india when two former presidents belonging to different institutions-praising so much present prime minister @narendramodi being best leader to shape d future of india with full honesty”
they are Pranab Mukerjee n Pratibha patil” pic.twitter.com/voPG5Hkd2Q
மேலும் இது குறித்துத் தேடிய போது, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியும் பிரதமர் மோடியைப் பாராட்டியதாக 2018ஆம் ஆண்டு முகநூல் பக்கத்தில் வெளியான பதிவு ஒன்றைப் பார்க்க முடிந்தது.
இந்த தகவல்கள் 2018ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருவதைக் காணமுடிந்தது. ஆனால் இது தொடர்பான எந்த செய்தியும் வெளியானதைப் பார்க்கமுடியவில்லை.
அதே ஆண்டே The Quint ஊடகம் இது குறித்து பிரதீபா பாட்டீல் மற்றும் பிரணாப் முகர்ஜி ஆகியோரின் அலுவலகங்களைத் தொடர்பு கொண்டு கேட்ட போது, பரவி வரும் செய்திகள் போலியானவை என்று இருவரின் அலுவலக அதிகாரிகளும் அப்போதே உறுதிப்படுத்தியுள்ளதாகச் செய்தி வெளியிட்டிருந்தது.
முடிவு:
நம் தேடலில் முன்னாள் குடியரசுத் தலைவரான பிரதீபா பாட்டீல், பிரதமர் மோடியைப் பாராட்டியதாகப் பரவும் செய்தி தவறானவை. இது 2018 முதலே பரப்பப்பட்டு வருகிறது.