YouTurn

மேற்கு வங்க கலவரத்தில் காவலர்களின் செயல் எனப் பரவும் மத்தியபிரதேச வீடியோ!

மேற்கு வங்க கலவரத்தில் காவலர்களின் செயல் எனப் பரவும் மத்தியபிரதேச வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஊரடங்கை மீறி மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் கூட்டுத் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் கைது செய்த வீடியோவை, தற்போது மேற்கு வங்காளத்தில் நடந்தது போல் பரப்புகின்றனர்.

பரவிய செய்தி

மேற்கு வங்காளத்தில் கலவர காரர்களை கைது செய்யும்  காவல் துறையினர் அழிக்க விட்டு வேடிக்கை பார்த்தது இவர்கள் தானே??!!!

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

மேற்கு வங்க மாநிலத்தின் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் சமீபத்தில் 'வக்ஃப் சட்டத் திருத்த மசோதாவிற்கு' எதிரான போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் மூன்று நபர்கள் இறந்ததாகவும், பல சொத்துகள் சேதமடைந்ததாகவும் சொல்லப்படுகிறது. கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பெயரில் மத்திய ஆயுத காவல் படை வரவழைக்கப்பட்டது. தற்போது கலவரம் பாதித்த இடங்கள் இயல்பு நிலைக்குத் திரும்பியுள்ளது. இந்நிலையில் மேற்கு வங்கத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களைக் கைது செய்யும் காவல்துறையினர் என்று 46 நொடிகள் கொண்ட காணொளி ஒன்ற பரப்பப்படுகிறது. 


உண்மை என்ன ? 

பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது NDTV செய்தி ஊடகத்தின் ரிப்போட்டர் Anurag Dwary-ன் எக்ஸ் பக்கத்தில், இந்த காணொளி ஏப்ரல் 17, 2020ல் பதிவிடப்பட்டிருந்தது. அதில் ஊரடங்கை மீறிக் கூட்டுத் தொழுகை நடத்தியதற்காக ரத்லமில் பகுதியில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.

இது குறித்து மேலும் தேடிப் பார்த்ததில்,  ஏப்ரல் 18, 2020 அன்று NDTVயின் இணையதள பக்கத்தில், "MP: People were praying together in a mosque, when the police came, many ran away and some were beaten up and taken away - video surfaced" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், கொரோனா தொற்று வந்த போது, ஊரடங்கை மீறி மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் கூட்டுத் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் கைது செய்தனர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் ONEINDIA HINDI செய்தி ஊடகத்தின் யூடியூப் பக்கத்தில், "Lockdown 2.0: Rules once again ignored in MP's Ratlam, people offer namaz collectively in mosque" என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் சரியாக  0.22 நொடியில் பரவி வரும் காணொளியின் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. 


அதே போல் K9 Media யூடியூப் பக்கத்திலும், இது குறித்த செய்தி 19 ஏப்ரல் 2020 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

முடிவு : 

மேற்கு வங்காளத்தில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததாகப் பரவும் காணொளி ஊரடங்கை மீறி மத்தியப் பிரதேசத்தின் ரத்லமில் பகுதியில் அமைந்துள்ள ஒரு மசூதியில் கூட்டுத் தொழுகை நடத்திக் கொண்டிருந்த சிலரை காவல்துறையினர் கைது செய்த வீடியோ ஆகும்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.