YouTurn

யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !

யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

வணக்கம் டா மாப்ள.. வானத்துல இருந்து.. ஆமா யாருக்கு டாட்டா காட்டிட்டு இருக்கார்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

நவம்பர் 25 அன்று இந்திய விமானப்படைக்கு சொந்தமான தேஜஸ் போர் விமானத்தில் பிரதமர் நரேந்திர மோடி பயணம் செய்தார். ஒலியைவிட 1.6 வேகத்தில் பயணிக்கக்கூடிய இந்த விமானம் மணிக்கு 1975 கிமீ வேகத்தில் பயணிக்கக்கூடியது. மேலும் மற்ற போர் விமானங்களை விட இது மிகக் குறைவான எடையைக் கொண்டிருந்தாலும், 13500 கிகி வரையிலான எடைகளைத் தாங்கக் கூடியது போன்ற பல சிறப்புகளைக் கொண்டது இந்த தேஜஸ் போர் விமானம்.

இந்நிலையில், இந்த விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்யும் பொழுது, நடுவானில் இருந்தபடியே அங்கிருந்து கை அசைத்துக் கொண்டே பயணம் செய்வது போன்ற வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அந்த வீடியோவை சிலர், நடுவானில் யாரும் இல்லாதபொழுதும் கூட மோடி கையசைத்து பயணம் செய்கிறார் பாருங்கள் என்று கூறி நையாண்டியாகப் பதிவு செய்துள்ளதையும் காண முடிகிறது.





உண்மை என்ன ?

தேஜஸ் போர் விமானம் பயணம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த நவம்பர் 25 அன்று பதிவு செய்து இருக்கிறார். அதில், "தேஜஸில் ஒரு பயணம் வெற்றிகரமாக முடிந்தது. இந்த அனுபவம் நம்பமுடியாத அளவிற்கு என்னை மேம்படுத்தியது. நமது நாட்டின் பூர்வீக திறன்கள் மீதான எனது நம்பிக்கையையும் இது கணிசமாக உயர்த்தியுள்ளது. மேலும் நமது நாட்டின் திறனைப் பற்றிய புதிய பெருமை மற்றும் நம்பிக்கையை எனக்கு அளித்தது." என்று குறிப்பிட்டு பதிவு செய்திருந்தார்.



மேலும் மற்றொரு எக்ஸ் பதிவில் பரவி வரும் வீடியோவின் முழுப் பகுதியையும் குறிப்பிட்டு பதிவு செய்திருந்தையும் காண முடிந்தது.



அந்த வீடியோவில், அவர் தேஜஸ் விமானத்தில் பயணம் செய்து கொண்டிருக்கும் போதே, அவர் பயணம் செய்த விமானத்தைத் தவிர்த்து, மற்றொரு தேஜஸ் போர் விமானமும் வானில் பயணம் செய்வதைக் காண முடிந்தது. எனவே அந்த மற்றொரு போர் விமானத்தை பார்த்தே, இந்த விமானத்தில் இருந்த கேப்டனும், பயணம் செய்த பிரதமர் மோடியும் கை அசைத்துள்ளனர் என்பது உறுதியாகிறது.



 

மேலும் படிக்க: உலகக்கோப்பை இறுதி போட்டிக்கு முன் பிரதமர் மோடி மைதானத்தில் ஊர்வலம் போனதாகப் பரவும் பழைய வீடியோ !

இதற்கு முன்பும் பிரதமர் மோடி குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: பிரதமர் மோடியின் தாயார் வசித்த வீடு குறித்து தவறாகப் பரப்பப்படும் தகவல் !

முடிவு:

நம் தேடலில், தேஜஸ் போர் விமானத்தில் பயணம் செய்த மோடி, யாருமில்லாத நடுவானில் கை அசைத்து சென்றதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க