யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பிரேக்கிங் நியூஸ்! PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் 2024 விண்ணப்பங்களை ஏற்கத் தொடங்கியது. எங்கள் திட்டம் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்களுக்குத் திறந்திருக்கும், சொந்த மடிக்கணினிகளை வாங்க இயலவில்லை, ஆனால் அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கு ஒன்று தேவை. விண்ணப்பங்கள் தொடங்கியுள்ளன, இடங்கள் குறைவாகவே உள்ளன! விண்ணப்பித்தவர்களுக்கு ஏற்கனவே மடிக்கணினிகள் வரத் தொடங்கியுள்ளன. காலக்கெடுவை:04/29/2024

விரிவான விளக்கம்
ஏழை எளியமக்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும் சொந்தமாக மடிக்கணினி வாங்க முடியாதவர்களுக்கும் உதவும் வகையில் பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் தொடங்கப்பட்டுள்ளதாக வாட்ஸ்அப்பில் ஓர் தகவல் பரப்பப்படுகிறது.
இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ’04.29.2024’ எனக் குறிப்பிட்டு, லிங்க் ஒன்று பகிரப்படுகிறது. இதுபோல் லிங்க்-ஐ கிளிக் செய்தால் பணம் கிடைக்கும் என்றும் சில தகவல்களை பரப்புகின்றனர்.
உண்மை என்ன?
PMYP பிரதம மந்திரி லேப்டாப் திட்டம் குறித்து தேடியதில், அப்படி எந்தவொரு திட்டமும் ஒன்றிய அரசால் கொண்டு வரப்படவில்லை என்பதை அறியமுடிந்தது. மேலும், பரவக்கூடிய தகவலில் உள்ள லிங்கை கிளிக் செய்து பார்த்ததில், அது போலியாக உருவக்கப்பட்டது என தெரியவந்தது.
மேலும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தேடினோம். வாட்ஸ் அப்பில் பரவும் இத்தகவல் தொடர்பாக கடந்த 19ம் தேதியன்று அத்தளத்தில் அறிக்கை ஒன்று வெளியிட்டு இருந்ததை பார்க்க முடிந்தது.

அதில், பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் போலியானது. AICTEக்கு தொடர்பில்லாத திட்டங்கள் பற்றி தவறான தகவல்கள் சமூக வலைத்தளங்களிலும் சில இணையதளங்களிலும் பரப்பப்படுகிறது. அவை AICTE-யின் கவனத்திற்கு வரும்போதெல்லாம் அது குறித்து விளக்கமும் அளித்துள்ளது. அப்படியான தகவல்களை மாணவர்கள் நிராகரியுங்கள். மேலும் அதிகாரப்பூர்வ இணையதளத்திலோ அல்லது அலுவலகத்தை தொடர்பு கொண்டோ தகவலை சரிபாருங்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து பிரதம மந்திரி இலவச லேப்டாப் என பரவக் கூடிய தகவல் போலியானது என்பதை அறிய முடிகிறது.

மேலும் இதேபோல் ’பாரதிய ஜனதா கட்சி இந்திய மக்கள் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் ரூ.5,000 இலவசமாக வழங்கும்’ என்கிற தகவலும் பரப்பப்படுகிறது. அதுவும் போலியாக உருவாக்கப்பட்டது. இவ்வாறான தகவல்களை உண்மை என எண்ணி நம்பகத்தன்மையற்ற லிங்க்-களை கிளிக் செய்ய வேண்டாம்.
முடிவு :
நம் தேடலில், பிரதம மந்திரி இலவச லேப்டாப் திட்டம் என வாட்ஸ் அப்பில் பரவும் செய்தி தவறானது. அப்படி எந்த திட்டமும் இல்லையென அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் அறிக்கை வெளியிட்டுள்ளது.