YouTurn

டாக்டர் ஹெட்கேவர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் பைக்கில் பயணிப்பது போன்ற படம் உண்மையானதா?

டாக்டர் ஹெட்கேவர் மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோர் பைக்கில் பயணிப்பது போன்ற படம் உண்மையானதா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

வைரலாகும் இந்த புகைப்படம் டிஜிட்டம் முறையில் உருவாக்கப்பட்டது. இந்தப் புகைப்படத்திற்கு எந்த வரலாற்று ஆதாரமும் இல்லை.

பரவிய செய்தி

அம்பேத்கருக்கும், ஆர் எஸ் எஸ் க்கும் என்ன சம்பந்தம் என கேட்பவர்களுக்கு, இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில் நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாருடன், டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர்.

image.png

Facebook Link | Archived Link

விரிவான விளக்கம்

பரவி வரும் கருப்பு வெள்ளை புகைப்படத்தில், அம்பேத்கரும், ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நிறுவனர் ஹெட்கேவரும் நெரிசலான சாலையில் பைக்கில் செல்வதை காணலாம். மேலும் அந்த பதிவில், இந்துத்துவம், இந்து தேசியம் எனும் இந்துத்துவா கொள்கையை நிலைநாட்ட, ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தை, நாக்பூரில் 1925ஆம் ஆண்டில் நிறுவிய டாக்டர் கேசவ பலிராம் ஹெட்கேவாருடன், டாக்டர் பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 



உண்மை என்ன ? 

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது இது குறித்த எந்த செய்தி ஆதாரங்களிலோ, வரலாற்று கட்டுரைகளிலோ அல்லது காப்பகத் தொகுப்புகளிலோ அம்பேத்கர் குறித்தான இந்த புகைப்படம் கிடைக்கவில்லை.


மேலும் இந்த புகைப்படம் சந்தேகம் இருந்ததால், வைரலான புகைப்படத்தை மீண்டும் ஆய்வு செய்தோம். அப்போது அம்பேத்கரின் விரல் சிதைந்திருப்பதைக் கண்டறிந்தோம். கூடுதலாக அம்பேத்கரின் உடைக்கு நேர் கீழே தோன்றும் மற்றொரு நபரின் முகம் சிதைந்திருந்ததையும் காணமுடிந்தது. அதே போல் ஹெட்கேவரின் ஒரு விரல் மட்டுமே பைக் கிளட்சில் இருந்ததையும் காணமுடிந்தது. 



கடைசியாக வைரல் புகைப்படத்தில் உள்ள பைக்கில் "78787655"  என்ற பதிவு எண் இருப்பது போல் தெரிகிறது. இருப்பினும், பிரிட்டிஷ் ஆட்சியின் போது இந்தியாவில் '78787655' போன்ற 8 இலக்க பதிவு எண்கள் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. பிரிட்டிஷ் ஆட்சியின் போது, ​​வாகனப் பதிவு எண்கள் பிராந்திய குறியீடுகளின் அடிப்படையில் எண்ணெழுத்து வடிவத்தைக்  கொண்டிருந்தன, அதாவது பம்பாய்க்கு 'B XXXX' அல்லது மைசூருக்கு 'MYS XXXX'.


அம்பேத்கர் ஹெட்கேவரை ஒரு முறை மட்டுமே சந்தித்ததாக THE PRINT ஊடகம் October 02, 2019 அன்று வெளியிட்ட கட்டுரையில் காணமுடிந்தது. ஹெட்கேவர், கோல்வால்கர் மற்றும் சாவர்க்கர் ஆகியோர் அடங்கிய குழு, இந்து ராஷ்ட்ர யோசனைக்கு அம்பேத்கரின் ஆதரவைப் பெற சந்தித்தது. ஆனால் அம்பேத்கர் அதை நிராகரித்தார் என்ற குறிப்புகளை காணமுடிந்தது.


image.png


முடிவு : 

அம்பேத்கர் ஆர்.எஸ்.எஸ் நிறுவனர் ஹெட்கேவருடன் மோட்டார் சைக்கிளில் செல்வதைக் காட்டும் இந்தப் புகைப்படம் போலியானது. இந்த வைரல் புகைப்படம் டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்டது.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க