யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
விருதுநகரில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், தென்மண்டல திமுக இளைஞரணி மாநாடு நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பொன்முடி, அன்பில் மகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கனிமொழி, திருச்சி சிவா உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். அதில் திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அப்போது அவர் மேடைக்கு வரும் போது, செருப்பு எறியப்பட்டதாக புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
🚨 Slippers thrown at MK Stalin during Ramp walk.
[Source - RajathiAmmalTV] pic.twitter.com/uMzDVty4L3
உண்மை என்ன?
முதலில் விருதுநகரில் நடைபெற்ற திமுக இளைஞரணி மாநாடு குறித்து ஊடகங்களில் வெளியான வீடியோக்களை தேடிப் பார்த்தோம். அப்போது சத்யம் டிவி ஊடகத்தின் யூடியூப் சேனலில், “அரங்கம்அதிர கெத்து காட்டிய முதல்வர் ஸ்டாலின்” என்ற தலைப்பில் பிப்ரவரி 7 அன்று, மாநாட்டிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகை தந்த முழுவீடியோவும் இடம்பெற்றிருந்தது.
அந்த வீடியோவில் சரியாக 3:11 நிமிடத்தில், பரவி வரும் புகைப்படத்தின் காட்சிகள் இடம்பெற்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதில் எங்கும் செருப்பு வீசப்பட்டதற்கான காட்சிகளும் இல்லை. எனவே உண்மையான வீடியோவை screenshot எடுத்து, செருப்பு வீசப்பட்டது போல் எடிட் செய்து பரப்பப்பட்டு வருவது தெரியவந்தந்து.
முடிவு:
எனவே, விருதுநகரில் நடைபெற்ற தி.மு.க இளைஞர் அணி 'தென்மண்டல நிர்வாகிகள் சந்திப்பு' மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேடையை நோக்கி வரும் போது செருப்பு வீசப்பட்டது போன்று பரவும் புகைப்படம் உண்மையானதல்ல. உண்மையான புகைப்படத்தை எடிட் செய்து தவறாகப் பரப்பி வருகின்றனர்.
