YouTurn

தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் தண்டவாளத்தில் கார் வேகமாக ஓட்டியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

தெலங்கானாவில் இஸ்லாம் மதத்தை சேர்ந்த பெண் தண்டவாளத்தில் கார் வேகமாக ஓட்டியதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

தெலங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்ற பெண்ணின் பெயர் ரவிகா சோனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது.

பரவிய செய்தி

அமைதி மார்க்கத்தின் அட்டுழியம். தெலங்கானா. ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் கார் வேகமாக சென்றது. ஊழியர்கள் உடனடியாக அவரை நிறுத்துமாறு சைகை காட்டினர். ஆனால், அந்த முஸ்லீம் பெண் காரை தண்டவாளத்திலேயே தொடர்ந்து ஓட்டினார். கட்டுப்பாட்டு அறைக்கு ரயில்வே ஊழியர்கள் தகவல் தெரிவித்தனர்.

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தெலங்கானா ஷங்கர்பள்ளி அருகே தண்டவாளத்தில் கார் வேகமாக சென்றதாகவும், அந்த காரை இயக்கியது இஸ்லாத்தை சேர்ந்த பெண் என்றும் சமூக ஊடகங்களில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் இந்த செய்தி குறித்து தேடி பார்த்தோம். அப்போது ஜூன் 27, 2025 அன்று ”தண்டவாளத்தில் கார் ஓட்டிய பெண் கைது: 2 மணி நேரம் ரயில் போக்குவரத்து பாதிப்பு” என்ற தலைப்பில் இந்து தமிழில் செய்தி ஒன்று வெளியாகியிருந்தது. அதில் தெலங்கானா மாநிலத்தில் ரீல்ஸ் மோகத்தால் ரவிகா சோனி, நாகலபல்லி - சங்கரபல்லி இடையே 7 கி.மீ தூரத்துக்கு தண்டவாளத்தின் மீது தனது காரை ஓட்டிச் சென்றதாகவும், அங்கிருந்த பொதுமக்கள் ஓடி வந்து, அந்த காரை நிறுத்தி, ரவிகா சோனியை காரில் இருந்து வலுக்கட்டாயமாக இறக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் தினமணி ஊடகத்தில், ”இந்தியா தெலங்கானா: தண்டவாளத்தில் தாறுமாறாக கார் ஓட்டிய பெண்!” என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில், "சங்கர்பள்ளி பகுதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு பெண் ஒருவர் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டிச் சென்றார். இது தொடர்பாக தகவல் கிடைத்ததும், அந்தத் தடத்தில் பயணிக்கும் ரயில்கள் நிறுத்தப்பட்டன. சில ரயில்கள் மாற்றுப் பாதையில் திருப்பிவிடப்பட்டன", என தெரிவிக்கப்பட்டிருந்தது. 


இதே போல் சமயம், இந்தியா டூடே போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியாகியிருந்ததை பார்க்கமுடிந்தது. 


முடிவு : 

தெலங்கானாவில் ரயில் தண்டவாளத்தில் காரை வேகமாக ஓட்டி சென்ற பெண்ணின் பெயர் ரவிகா சோனி. இவர் இந்து மதத்தை சேர்ந்தவர் என்பதை அறிய முடிகிறது. இந்நிலையில் இவர் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர் என்று கூறி மதவாதத்தை திணித்து தவறாகப் பரப்பி வருகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க