YouTurn

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது : சொன்னது துல்கர் சல்மான் இல்லை.. நிதியமைச்சரின் கணவர் !

மோடி மீண்டும் ஆட்சிக்கு வரக் கூடாது : சொன்னது துல்கர் சல்மான் இல்லை.. நிதியமைச்சரின் கணவர் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வருகின்ற தேர்தலே இந்தியாவின் கடைசி தேர்தலாக இருக்கும். இந்தியாவின் ஒட்டு மொத்த சித்திரமே மாறும். செங்கோட்டையில் இருந்து வெறுப்பு பேச்சுக்களைக் கேட்பீர்கள். மணிப்பூர் மாதிரியான சூழ்நிலைகள் நாடு முழுவதும் நிலவும். - நடிகர் துல்கர் சல்மான்


X link

விரிவான விளக்கம்

இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி 2 ஆட்சிக் காலத்தை (10 ஆண்டுகள்) நிறைவு செய்துவிட்டார். மூன்றாவது முறையாகவும் அவர் பிரதமராக வேண்டுமென பாஜக தேர்தல் பிரச்சாரத்தைச் செய்து வருகிறது. 

இந்நிலையில் அவர் மீண்டும் பிரதமரானால் இந்தியாவில் நடக்கும் கடைசி தேர்தல் இதுவாகவே இருக்கும் என்று நடிகர் துல்கர் சல்மான் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் சொன்னதாகப் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன? 

மோடி மீண்டும் பிரதமராகக் கூடாது என துல்கர் சல்மான் சொன்னதாகப் பரவும் நியூஸ் கார்டில் ‘INQUILAB INDIA’ என்கிற பெயர் இருப்பதைக் காண முடிகிறது. அப்பெயரைக் கொண்டு இணையத்தில் தேடினோம். இன்குலாப் இந்தியா என்னும் இன்ஸ்டாகிராம் பக்கம் ஒன்று உள்ளது. ஆனால், அப்பக்கத்தில் துல்கர் சல்மான் கூறியதாகப் பரவும் தகவல் பதிவிடப்படவில்லை. 

மேலும் துல்கர் கூறியதாகப் பரவும் கருத்தை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநருமான பரகால பிரபாகர் கூறியதாக ஒரு கார்டு அப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 




இது பற்றி மேற்கொண்டு தேடியதில் ‘Live mint’ தளத்தில் நேற்றைய (ஏப்.8) தினம் வெளியிடப்பட்டிருந்த கட்டுரை ஒன்று கிடைத்தது. அக்கட்டுரையில், பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் தேர்தல் நடக்காது. மோடியும் அவரது அமைச்சரவையும் மீண்டும் வந்தால் அரசியலமைப்பு மற்றும் இந்திய வரைபடம் மாறும். செங்கோட்டையில் இருந்து மோடியே வெறுப்புப் பேச்சு பேசுவார் என பரகால பிரபாகர் சொன்னதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



இக்கட்டுரை தீபக் சர்மா என்பவருக்கு பரகால பிரபாகர் அளித்த நேர்காணலுடன் தொடர்புடையது. ஏப்ரல் 6ம் தேதி தீபக் சர்மாவின் யூடியூப் பக்கத்தில் அந்த நேர்காணல் பதிவிடப்பட்டுள்ளது. பரகால பிரபாகர் சொன்னதாக Live mint தளத்தில் உள்ளவை, அந்த நேர்காணலில் இருப்பதை யூடர்ன் உறுதி செய்தது. இன்னும் பாஜக குறித்து பல விமர்சனங்களை அந்நேர்காணலில் அவர் முன்வைத்துள்ளார். 



பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு முஸ்லிம்கள் மீது நாடு முழுவதும் தாக்குதல் சம்பவங்களும் வெறுப்பு பேச்சும் அதிகரித்துள்ளது. பாஜகவோ அல்லது அவர்களது கூட்டணி அரசுகளோ ஆட்சி செய்யும் மாநிலங்களில் சிறுபான்மை மதத்தினருக்கு எதிரான வெளிப்படை வெறுப்பு அரசியலை முன்னெடுக்கிறது. இது குறித்து பரகால பிரபாகர் சொன்ன கருத்தை துல்கர் சல்மான் சொன்னதாகத் தவறாகப் பரப்புகின்றனர். 

முடிவு : 

மோடி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வரவிருக்கும் தேர்தல்தான் இந்தியா சந்திக்கும் கடைசி தேர்தல் என துல்கர் சல்மான் சொன்னதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவரும் பொருளாதார வல்லுநரும் பரகால பிரபாகரின் கருத்து.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க