யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
பெண்களை அதுவும் தன் கட்சிப் பெண்கள் மீதே பாலியல் அத்துமீறலில் ஈடுபடும் பாஜகவினர். இந்தியாவின் மகள்களை சீரழிப்பதில் பாஜகவினருக்கு என்றுமே இன்பம் தான். இந்தியாவின் மகள்களை காப்பாற்ற பாஜகவை ஒழித்தால் மட்டுமே முடியும்.

X Link | Archive Link

X Link | Archive Link
விரிவான விளக்கம்
2024 மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 அன்று நடைபெறவுள்ளது. எனவே இந்தியா முழுவதுமே அரசியல் தலைவர்கள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் நிலையில், பாஜகவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை என்று கூறி 13 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் பரவி வரும் வீடியோவில், கூட்டத்தின் நடுவே நிற்கும் பெண், அருகில் இருக்கும் நபரால் பாலியல் ரீதியாக தாக்கப்படுவதையும் காண முடிகிறது.
உண்மை என்ன?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இந்தியாவில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.
Defence Forum India என்ற இணையதளத்தில் இதே வீடியோ 2012 இல், "பாகிஸ்தான் பிரதமர் கிலானி ஷெர்ரி ரெஹ்மானை பாலியல் ரீதியாகத் தாக்கினார்" என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.

Riaz Haq என்ற யூடியூப் பக்கத்திலும் இதே வீடியோ 2007 இல் எடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்யப்பட்டிருந்தது.
வீடியோவில் இருக்கும் பெண் யார் என்பது குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், இவர் பெயர் ஷெர்ரி ரெஹ்மான் என்பதையும், இவர் பாகிஸ்தானைச் சேர்ந்த அரசியல்வாதி மற்றும் பத்திரிக்கையாளர் என்பதையும் உறுதிபடுத்த முடிந்தது. இதன் மூலம் பரவி வரும் வீடியோ பாகிஸ்தானில் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

மேலும் படிக்க: பாகிஸ்தான் மத போதகர் யூதர்களுக்கு எதிராக பேசிய பொய்யால் மேடை இடிந்தது எனத் தவறாகப் பரவும் பழைய வீடியோ !
இதற்கு முன்பும் பாகிஸ்தான் குறித்து பரவிய பல செய்திகளை ஆய்வு செய்து, நம் பக்கத்தில் கட்டுரை வெளியிட்டிருக்கிறோம்.
மேலும் படிக்க: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் பாபர் அசாம் தனது சகோதரியை திருமணம் செய்ததாகப் பரவும் வதந்தி !
முடிவு:
நம் தேடலில், பாகிஸ்தானில் எடுக்கப்பட்ட வீடியோவை, இந்தியாவில் பாஜக கட்சினர் பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்டது என்று கூறி சமூக ஊடகங்களில் சிலர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது.