யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று மக்கள் சேவை செய்த இஸ்லாமிய மக்களுக்கு பத்மஶ்ரீ கொடுத்திருப்பார்களா? இதுதான் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம்.

X link
விரிவான விளக்கம்
இந்திய அரசின் பத்ம விருதுகள் 1954ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதில் நாட்டின் நான்காவது உயரிய விருதாக கருதப்படும் பத்ம ஸ்ரீ விருதும் அடங்கும். இவ்விருது கலை, விளையாட்டு, அறிவியல், பொது சேவை முதலிய துறைகளில் சிறந்து விளங்கியவர்களுக்கு வழங்கப்படுகிறது.
இந்நிலையில் இவ்வாண்டு பத்ம ஸ்ரீ விருது முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் இதுவே காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது கிடையாது என்றும் பாஜகவை சேர்ந்த சவுதா மணி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முஸ்லிம்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கும் போது எடுக்கப்பட்டது. இவ்வாண்டு மொத்தம் 110 நபர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 முஸ்லிம்கள் அடங்குவர்.
மேற்கொண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலங்களில் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுவாரியாக எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என்பதையும் பட்டியலிட்டோம்.

ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின்படி 1954 முதல் 2024ம் ஆண்டு வரை 3,531 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2,170 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எனப் பார்க்கையில் 159 விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கையில் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளில் 7.32 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
[caption id="attachment_55223" align="aligncenter" width="615"]
Source: Ministry of Home Affairs[/caption]
இதுவே பாஜக ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளின் எண்ணிக்கை 1,260. இதில் முஸ்லிம்கள் 82 பேர். இதன்படி பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளில் 6.5 சதவீதம் தான் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை கொண்டு பார்க்கையில் பாஜகவை காட்டிலும் காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் முஸ்லிம்களுக்கு அதிக அளவில் பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன என்பதை அறிய முடிகிறது.
முடிவு:
பாஜக ஆட்சியில் முஸ்லிம்களுக்கு பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்படுகிறது. இதுவே காங்கிரஸ் ஆட்சியில் அப்படி வழங்கப்படவில்லை எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. காங்கிரஸ் ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில் இது போன்று மக்கள் சேவை செய்த இஸ்லாமிய மக்களுக்கு பத்மஶ்ரீ கொடுத்திருப்பார்களா?
இதுதான் பாஜகவிற்கும் காங்கிரசுக்கும் உள்ள வித்தியாசம். pic.twitter.com/a9UkzzDoC7
— Sowdha Mani (மோடியின் குடும்பம்) (@SowdhaMani7) May 13, 2024
இந்நிலையில் இவ்வாண்டு பத்ம ஸ்ரீ விருது முஸ்லிம்களுக்கும் வழங்கப்பட்டதாகவும் இதுவே காங்கிரஸ் ஆட்சியின் போது முஸ்லிம்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது கிடையாது என்றும் பாஜகவை சேர்ந்த சவுதா மணி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் முஸ்லிம்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் பத்ம ஸ்ரீ விருது பெறுகின்றனர்.
உண்மை என்ன?
பரவக் கூடிய வீடியோ இந்த ஆண்டு பத்ம ஸ்ரீ விருது வழங்கும் போது எடுக்கப்பட்டது. இவ்வாண்டு மொத்தம் 110 நபர்களுக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 முஸ்லிம்கள் அடங்குவர்.
மேற்கொண்டு காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சி காலங்களில் பத்ம ஸ்ரீ விருதுகள் ஆண்டுவாரியாக எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அதில் முஸ்லிம்கள் எத்தனை பேர் என்பதையும் பட்டியலிட்டோம்.

ஒன்றிய அரசின் இணையதளத்தில் பதிவிடப்பட்டுள்ள தரவுகளின்படி 1954 முதல் 2024ம் ஆண்டு வரை 3,531 பத்ம ஸ்ரீ விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் காங்கிரஸ் ஆட்சியின் போது 2,170 விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக முஸ்லிம்களுக்கு எனப் பார்க்கையில் 159 விருதுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த எண்ணிக்கையின் அடிப்படையில் பார்க்கையில் காங்கிரஸ் ஆட்சியில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளில் 7.32 சதவீதம் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
[caption id="attachment_55223" align="aligncenter" width="615"]
Source: Ministry of Home Affairs[/caption]இதுவே பாஜக ஆட்சி செய்த காலக்கட்டத்தில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளின் எண்ணிக்கை 1,260. இதில் முஸ்லிம்கள் 82 பேர். இதன்படி பாஜக ஆட்சியில் வழங்கப்பட்ட பத்ம ஸ்ரீ விருதுகளில் 6.5 சதவீதம் தான் முஸ்லிம்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.