யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் இடைக்கால பட்ஜெட் தயாரிப்பில் தலித் மற்றும் பழங்குடி பிரிவைச் சேர்ந்த நிதி இணையமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
2024 - 25ஆம் ஆண்டுக்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கை கடந்த 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பேசும்போது, நாட்டின் மக்கள்தொகையில் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர் 73 சதவிகிதம் பேர் உள்ளனர். அவர்களுக்கு நிதிநிலையில் எதுவும் அறிவிக்கப்படவில்லை. அல்வா தயாரிக்கும் நிகழ்வில்கூட இவர்களுக்கு இடமில்லையெனக் கிண்டலாக விமர்சித்திருந்தார்.
How many Dalit brothers in this picture @SupriyaShrinate ? 👮♂️🤔
— Boiled Anda 🥚🇮🇳 (@AmitLeliSlayer) July 29, 2024
😂😂😂😂
Seesho ke mahal me rehnewale doosre ki ghar may patthar na maro 😂😂😂 pic.twitter.com/LwOcnpWXzp
இதனைத்தொடர்ந்து, ப.சிதம்பரம் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைச்சரவையில் நிதியமைச்சராக இருந்தபோது பட்ஜெட் காலத்தில் அல்வா வழங்கும் புகைப்படத்தை வலதுசாரி ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, இந்த புகைப்படத்தில் தலித் யாரும் இல்லை எனப் பரப்பி வருகின்றனர்.
உண்மை என்ன?
பரவக்கூடிய புகைப்படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடியதில், இது 2014ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இடைக்கால பட்ஜெட்டின் போது எடுக்கப்பட்டது என்பதை உறுதிசெய்ய முடிந்தது.
இந்த புகைப்படத்தில் ப.சிதம்பரத்துடன் ஒன்றிய இணையமைச்சர் ஜெ.டி.சீலம் (J.D.Seelam), நமோ நரேன் மீனா (Namo Narain Meena), நிதித்துறை செயலாளர் மற்றும் பிற அதிகாரிகள் இருந்ததாக PIB தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையமைச்சர்களில் பெயர்களைக் கொண்டு தேடியதில், ஜெ.டி.சீலம் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் என்பதும் நமோ நரேன் மீனா பட்டியல் பழங்குடியினர் என்பதும் அறியமுடிந்தது.

இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் பிரிவினர் மற்றும் பட்டியல் பழங்குடியினருக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என ராகுல் காந்தி தொடர்ந்து பல இடங்களில் பேசி வருகிறார். இதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி வருகிறார். அதன் ஒரு பகுதியாகவே நிதிநிலை அறிக்கை மீதான ராகுல் காந்தியின் பேச்சும் அமைந்துள்ளது.
ராகுல் காந்தி கேட்ட கேள்விக்குப் பதில் அளிக்காமல், சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் உங்கள் பட்ஜெட் தயாரிப்பில் அவ்வாறு இருந்ததா எனக் கேட்பது சரியான பதில் இல்லை.
இவற்றிலிருந்து ப.சிதம்பரம் ஒன்றிய நிதியமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தில் (பட்ஜெட் தயாரிப்பில்) அவருடன் தலித் மற்றும் பழங்குடியின பிரிவைச் சேர்ந்தவர்களும் இருப்பதை உறுதிப்படுத்த முடிகிறது.
முடிவு:
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின்போது இடைக்கால நிதிநிலையறிக்கை தயாரிப்பின்போது அவருடன் தலித் யாரும் இல்லை என சமூக வலைத்தளத்தில் பரவும் தகவல் உண்மை அல்ல. அப்படத்தில் உள்ள ஜெ.டி.சீலம் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர் மற்றும் நமோ நரேன் மீனா பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்.
