YouTurn

வீட்டிலிருந்து 60 கி.மீ தூரத்துக்குள் இருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் தேவையில்லை எனப் பரவும் வதந்தி

வீட்டிலிருந்து 60 கி.மீ தூரத்துக்குள் இருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் தேவையில்லை எனப் பரவும் வதந்தி

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில், 60 கி.மீ தூரம் கட்டாயம் இருக்கவேண்டும் என்றுதான் ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.

பரவிய செய்தி

உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீ - க்குள் சுங்கச்சாவடி கட்டணம் கட்ட வேண்டாம். ஆதார் அட்டை காட்டி கடந்து செல்லலாம்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

உங்கள் வீட்டிலிருந்து 60 கி.மீ தொலைவுக்குள் சுங்கச்சாவடி கட்டணம் கட்ட வேண்டாம். ஆதார் அட்டை காட்டி கடந்து செல்லலாம் என்று ஒன்றிய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைதுறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றக் கூட்டம் ஒன்றில் அறிவித்துள்ளார் பாருங்கள் என்று கூறி, நிதின் கட்காரி பேசுவது போன்ற 43 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 


உண்மை என்ன?



மேலும் இதுகுறித்து ‘Deccanherald’ ஊடகப் பக்கத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு மார்ச் 22 அன்று “60 கிமீக்குள் ஒன்றுக்கு மேற்பட்ட சுங்கச்சாவடிகள் இருக்கக்கூடாது: கட்கரி “ என்ற தலைப்பில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.  

அதில், “தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கிலோமீட்டர் தொலைவுக்குள் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்று ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி செவ்வாய்க்கிழமை அறிவித்தார். நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தூரத்தில் இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக புகார்கள் உள்ளன. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையே குறைந்தபட்சம் 60 கி.மீ இடைவெளி இருப்பதை உறுதி செய்வோம் என்று அவர் தெரிவித்துள்ளார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

மேலும் அதில், “தற்போதுள்ள விதியின்படி, தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், முகவரி சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறலாம். ஆதார் அட்டை முகவரி சான்றாக கருதப்பட்டு, அந்த குடியிருப்பாளர்களுக்கு இலவச பாஸ் வழங்கப்படும் என்று அமைச்சர் கூறினார்” என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இதன்மூலம், தேசிய நெடுஞ்சாலைகளில் 60 கி.மீ தூரத்துக்குள் இரண்டு சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தால், அவை அடுத்த 3 மாதங்களில் அகற்றப்படும் என்றும், தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் இருந்து 20 கிமீ சுற்றளவில் வசிக்கும் வாகன உரிமையாளர்கள், முகவரிச் சான்று உள்ளிட்ட தேவையான ஆவணங்களுடன் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்தால் சுங்கச்சாவடி கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு பெறலாம் என்றும் அவர் கடந்த 2022ஆம் ஆண்டில் அறிவித்திருந்தார் என்பதை அறியமுடிகிறது. 

இந்நிலையில், அவர் தேசிய நெடுஞ்சாலைகளில் இரண்டு சுங்கச்சாவடிகளுக்கு இடையில், 60 கி.மீ தூரம் கட்டாயம் இருக்கவேண்டும் என்று கூறியதை, பொதுமக்களின் வீட்டிலிருந்து சுங்கச்சாவடி 60 கி.மீ தூரத்திற்குள் இருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் தேவையில்லை என்று நிதின் கட்காரி கூறியதாகக் கூறி, தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறியமுடிகிறது. 

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள்:

சுங்கச்சாவடிகளில் உள்ளூர் மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகத்தின் இணையத்தளத்தில் ஆய்வு செய்ததில், தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008-ன் படி யாருக்கெல்லாம் கட்டண விலக்கு அளிக்கப்படுகின்றது என்பது குறித்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்ததைக் காணமுடிந்தது.

அதில், 2007-2008 கட்டண விதிப்படி, சுங்கச்சாவடியிலிருந்து 20 கிலோமீட்டர் தொலைவுக்குள் வசிப்பவர்கள் வியாபாரத்திற்கு அல்லாமல், தங்கள் சொந்த தேவைக்காக வாகனங்களை பயன்படுத்தும் போது, மாதத்திற்கு ரூ.150 செலுத்தி அனுமதிச் சீட்டை பெற்றுக் கொள்ளலாம் என்றும், அவர்களுக்கு சர்வீஸ் சாலை அல்லது மாற்று வழி இருப்பின் இத்தகைய அனுமதிச் சீட்டு வழங்கப்பட மாட்டாது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் தற்போதைய விதியின்படி (2023-2024 கட்டண விதியின் படி), 20 கிலோமீட்டர் சுற்றளவுக்குள் வசிப்பவர்களுக்கான அனுமதி சீட்டுக்கான மாதக்கட்டணம், ரூ.150 லிருந்து ரூ.330 ஆக உயர்த்தப்பட்டுள்ளது என்பதையும் அறியமுடிகிறது.


முடிவு:

நம் தேடலில், பொதுமக்களின் வீட்டிலிருந்து சுங்கச்சாவடி 60 கி.மீ தூரத்திற்குள் இருந்தால் சுங்கச்சாவடி கட்டணம் தேவையில்லை என்று ஒன்றிய அமைச்சர் நிதின் கட்காரி கூறியதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 


சுருக்கமாக


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.