YouTurn

குழந்தையை அடிக்கும் தாயின் கொடூர செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

குழந்தையை அடிக்கும் தாயின் கொடூர செயல் எனப் பரவும் பழைய வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரப்பப்படும் இந்த வீடியோவில் உள்ள சம்பவம் கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்ததாகும். உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வாரில் நடந்த சம்பவத்தை அப்போதே போலீஸாரும் குழந்தைகள் நலக் குழுவினரும் (CWC) விசாரித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பரவிய செய்தி

கடுமையான தண்டனை கிடைக்கும் வரை நாம் இந்த வீடியோவை பகிர வேண்டும் கூடிய விரைவில் தண்டனை கிடைத்து,,, அவளுக்கு இதற்கு கண்டிப்பாக ஆண்டவன் தண்டனை கொடுப்பான்,,, கூடிய விரைவில் அந்த வீடியோவையும் நாம் பார்ப்போம்

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

தாய் தனது குழந்தையை அடிப்பது போன்ற காணொளி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் கடுமையான தண்டனை கிடைக்கும் வரை நாம் இந்த வீடியோவை பகிர வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. 


உண்மை என்ன? 

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடி பார்த்தோம். அப்போது Punjab News Line என்ற ஊடகப்பக்கத்தில், ஜூலை 18, 2024 அன்று “Woman beats minor badly in family dispute, makes video and sends it to husband” என்ற தலைப்பில் இது குறித்து செய்தி வெளியாகியிருந்தது. அதில் குடும்ப தகராறில் கோபமடைந்த ஒரு பெண், தனது மகனை கடுமையாக அடித்து துன்புறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்றும், இது உத்தரகண்ட் மாநிலம் ஹரித்வாரில் நடந்தது எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


அதே போல் India Today ஊடகப்பக்கத்திலும், ”Haridwar woman thrashes minor son over dispute with husband, sends him viral video” என்ற தலைப்பில் 2024 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் தனது கணவர் மதுவுக்கு அடிமையானவர், வீட்டுச் செலவுகளுக்கு அவர் பங்களிக்கவில்லை என்றும், அவரை பயமுறுத்துவதற்காகவே இதையெல்லாம் செய்ததாகவும் அந்த பெண் குறிப்பிட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதை போலீஸாரும் குழந்தைகள் நலக் குழுவினரும் (CWC) விசாரித்தனர் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


மேலும் Times Of India, Times Now ஊடகப்பக்கங்களிலும் ஜூலை 18,2024 அன்று, இது குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்ததையும் பார்க்கமுடிந்தது. 


முடிவு: 

நம் தேடலில், பரப்பப்படும் இந்த வீடியோவில் உள்ள சம்பவம்  கடந்த 2024ஆம் ஆண்டு ஜூலை மாதம் நடந்தது என்பது தெரியவந்தது. இதை தற்போது நடந்தது போல் தவறாக பரப்புகின்றனர். 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க