YouTurn

உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் காட்சி எனப் பழைய வீடியோவை பரப்பும் அமர்பிரசாத் !

உத்தரகாண்ட் சுரங்கத்தில் தொழிலாளர்களை மீட்கும் காட்சி எனப் பழைய வீடியோவை பரப்பும் அமர்பிரசாத் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

17 நாட்களாக உத்திரகாண்டின் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களும் மீட்கப்பட்டனர் .


Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

உத்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12 அன்று ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கினர். இதற்கான மீட்புப்பணி 17-வது நாளான இன்றும் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், இன்றுடன் தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுவிடுவர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் உத்திரகாண்டில் தொழிலாளர்களை சுரங்கத்தில் இருந்து மீட்கும் காட்சி என்று கூறி 1:45 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில், 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று குறிப்பிடப்பட்டு அமர்பிரசாத் உட்பட பாஜகவினர் பலராலும் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது.



Twitter Link | Archive Link



உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இது இன்று எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பதை அறிய முடிந்தது.

கடந்த நவம்பர் 24 அன்று NDTV தனது யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோவின் முழு பகுதியை பதிவு செய்து செய்தி வெளியிட்டிருந்தது. அதில், "உத்தரகாண்ட் சுரங்கப்பாதை மீட்பு: சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் எவ்வாறு வெளியே இழுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள்" என்று தலைப்பில் வீடியோ வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.



மேலும் இதே வீடியோ நான்கு நாட்களுக்கு முன்பு இந்தியா டுடே யூடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டிருப்பதையும் காண முடிந்தது.



இதன் மூலம் இது கடந்த நவம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பதை உறுதிபடுத்த முடிகிறது.

மேலும் படிக்க: உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் அதானிக்கு சொந்தமானதா ?

இதற்கு முன்பும் உத்தரகாசி மீட்பு நடவடிக்கைகள் குறித்து பல செய்திகள் தவறாகப் பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளி எனப் பரவும் தவறான புகைப்படம் !

முடிவு:

நம் தேடலில், உத்தரகாண்டில் சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்களை மீட்கும் காட்சி என அமர்பிரசாத் ரெட்டி உட்பட பாஜகவினர் அனைவரும் பரப்பும் வீடியோ, கடந்த நவம்பர் 24 அன்று எடுக்கப்பட்ட பழைய ஒத்திகை வீடியோ என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க