YouTurn

ஹரியானாவில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் எனப் பொய் பரப்பும் பாஜகவினர்!

ஹரியானாவில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் எனப் பொய் பரப்பும் பாஜகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

காற்று வாக்கில் வந்த செய்தி : ஹாரியானாவில் சிறுமியிடம் தவறாக நடந்த காங்கிரஸ் கட்சி தலைவரை புரட்டி எடுத்த பெண்கள்.



X Link | Archive Link

விரிவான விளக்கம்

ஹரியானா மாநிலத்தில் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்ட காங்கிரஸ் தலைவர் என்று கூறி 29 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்பட்டு வருகிறது. பரவி வரும் அந்த வீடியோவில், தன்னை தாக்க வரும் ஒரு நபரை, பெண்கள் கூட்டாக சேர்ந்து அடிப்பதையும், பதிலுக்கு அவர் அந்த பெண்களை தாக்குவதையும் பார்க்க முடிகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோ கடந்த 2023 இல் இருந்தே சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது என்பதை அறிய முடிகிறது.



"News18 ஹிந்தி" ஊடகம் கடந்த 2021 பிப்ரவரி 20 அன்று பரவி வரும் இந்த வீடியோ குறித்து "மண்டி வைரல் வீடியோ: 'சங்ராம்' சாலையில், பெண்கள் கற்கள் மற்றும் கம்பால் ஒரு ஆணை அடித்துள்ளனர்" என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தது. அதில், இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள மண்டி மாவட்டத்தின் கோட்லி தாலுகாவிற்கு உட்பட்ட சர்வால் கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மகிளா மண்டல் மற்றும் நில உரிமையாளருக்கு இடையே சாலை விரிவாக்கம் தொடர்பாக ஏற்பட்ட தகராறு காரணமாக இருதரப்பினருக்கும் ரத்தகாயம் ஏற்பட்டது. 

இச்சம்பவம் பிப்ரவரி 17ம் தேதி நடந்தாலும், இன்று (பிப்ரவரி 20, 2021) அதன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இரு தரப்பினரும் காவல்நிலையத்தில் ஒருவர் மீது ஒருவர் எப்ஐஆர் பதிவு செய்துள்ளனர். தற்போது இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது



இதன் மூலம், ஹிமாச்சலப் பிரதேசத்தில், சாலை விரிவாக்கப் பணியின் போது ஏற்பட்ட தகராறின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோவை, ஹரியானாவில் தற்போது எடுக்கப்பட்டது என்று கூறி பாஜகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

மேலும் படிக்க: வறுமை, வேலையில்லா பிரச்சனையைத் தீர்க்க பணம் அச்சடிக்கப்பட்டு வழங்கப்படுமென ராகுல் காந்தி பேசியதாகப் பரவும் பொய்!

இதற்கு முன்பும் பாஜகவினர் பரப்பிய வதந்திகள் குறித்து ஆய்வு செய்து, நம் பக்கத்தில் கட்டுரைகள் வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: ராகுல்காந்தி கையில் வைத்திருப்பது சீன அரசியலமைப்பு புத்தகம் என பாஜகவினர் பரப்பும் பொய்!

முடிவு:

நம் தேடலில், ஹரியானாவில் சிறுமியிடம் தவறாக நடந்துகொண்ட காங்கிரஸ் தலைவர் என பாஜகவினர் பரப்பும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க