யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
இந்த வீடியோ 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திரிபுராவின் பிஷால்கர் நகரத்தில் பாஜக நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது.
பரவிய செய்தி
பீகாரில் 10 ஜமாத்தைச் சேர்ந்த 1000 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு BJPக்காக செய்த பிரச்சாரம்
பிஜேபி உள்ள வந்துடும்ன்னு தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்ட்டுகளும் இஸ்லாமிய
சகோதரர்களை மூளை சலவை செய்து பிஜேபிக்கு எதிரான சிந்தனையை உருவாக்குகிறார்கள்


விரிவான விளக்கம்
பீகார் மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் நவம்பர் மாதம் இரண்டு கட்டங்களாக நடக்கவுள்ளது. முதல் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 6ஆம் தேதி நடந்து முடிந்தது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 11ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் அணியும் குல்லா அணிந்து, பாஜக கொடி நிறத்தில் துண்டுகள் அணிந்து, தாமரை சின்னத்தை கையில் ஏந்தி ஆயிரக்கணக்கானோர் ஊர்வலம் செல்லும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, ‘பீகாரில் பாஜகவின் தேர்தல் பிரச்சார ஊர்வலத்தில் முஸ்லிம்கள் கலந்துகொண்டதாக’ பரப்பப்படுகிறது.
பீகாரில் 10 ஜமாத்தைச் சேர்ந்த
1000 இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு BJPக்காக செய்த பிரச்சாரம் பிஜேபி உள்ள வந்துடும்ன்னு
தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்ட்டுகளும் இஸ்லாமிய
சகோதரர்களை மூளை சலவை செய்து பிஜேபிக்கு எதிரான சிந்தனையை உருவாக்குகிறார்கள் pic.twitter.com/ZXYFXeMJmp
பீகாரில் 10 ஜமாத்தை சேர்ந்த 1000 இஸ்லாமியர் மட்டும் கலந்து கொண்டு பிஜேபிக்காக செய்த பிரச்சாரம் தான் இது.
.மோடிக்குஓட்டுபோடாதிங்க
பிஜேபிஉள்ளவந்துடும்னுனு
தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிட கட்சிகளும் பெரியாரிஸ்ட்டுகளும் பிஜேபிக்கு எதிரான சித்தாந்தத்தை உருவாக்கி
1/2 pic.twitter.com/sZmg5ggg0y
உண்மை என்ன?
பரப்பப்படும் வீடியோவின் keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ‘TRIPURA INFO WAY TIWN’ என்ற யூட்யூப் தளத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.

கடந்த 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், 'திரிபுரா மாநிலத்தில் உள்ள பிஷால்கர் என்ற நகரத்தில் நடந்த பாஜகவின் பேரணியில் ‘பிப்லாப் தேவ் மீண்டும் வந்துவிட்டார்’ என்று முஸ்லிம்கள் கோஷமிடுவதாக' குறிப்பிடப்பட்டுள்ளது.
இதிலிருந்து, இந்த வீடியோவில் காட்டப்படும் பேரணி ஓராண்டிற்கு முன்பு திரிபுராவின் பிஷால்கர் நகரில் நடந்தது என்பது தெளிவாகிறது.
முடிவு:
ஓராண்டிற்கு முன்பு திரிபுராவின் பிஷால்கர் நகரில் நடந்த பாஜகவின் பேரணியை தற்போது பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது நடந்ததாக திரித்துப் பரப்புகிறார்கள்.