யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரை முதன்முதலில் செருப்பால் அடித்த மூதாட்டி என பெரியார் புகைப்படமும் ஒரு மூதாட்டியின் புகைப்படமும் சேர்த்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
தமிழ்நாட்டில் இன்றியமையாத தலைவர்களில் ஒருவர் பெரியார். இன்றும் அவரது கருத்தியல் ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்றால் அது மிகையாகாது. பகுத்தறிவு பகலவன் என அழைக்கப்படும் தந்தை பெரியாரின் 146-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரியாரை முதன்முதலில் செருப்பால் அடித்த மூதாட்டி என பெரியார் புகைப்படமும் ஒரு மூதாட்டியின் புகைப்படமும் சேர்த்து சமூக ஊடகப்பக்கங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சிங்கப்பென்னே .... உனக்கெல்லாம் இது சாதாரணமே. 💦💦 @eena_vengayam 😂😂 #பெரியாராவதுமயிராவது #பெரியாராவது_மயிராவது pic.twitter.com/4p86TgtpnD
உண்மை என்ன ?
பரவிவரும் புகைப்படத்தை “Google Reverse Image Search” மூலம் ஆய்வு செய்து பார்த்ததில் dreamstime என்ற இணையதளப்பக்கத்தில் பரவக்கூடிய மூதாட்டியின் புகைப்படத்தைப் பார்க்க முடிந்தது.

அந்த புகைப்படத்துக்கு கீழ் இருந்த விளக்கத்தில் (Description) கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டிருந்தது:
"Portrait of an Indian old senior poor woman with saree. PONDICHERY, PUDUCHERRY, TAMIL NADU, INDIA - SEPTEMBER CIRCA, 2017. Portrait of an unidentified Indian old senior poor woman with saree in the street, looking serious sad" என்றிருந்தது.
மேலும், இதே தகவல் shutterstock என்ற இணையதளத்திலும் பதிவு செய்திருப்பதை பார்க்க முடிந்தது. கேத்தரின் (CatherineLprod ) என்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞர் எடுத்த புகைப்படம்தான் இது என்பதையும் அறியமுடிந்தது.
2017ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை சிலர் தவறான தகவலோடு பயன்படுத்திவருகின்றனர்.
பெரியாரின் பிறந்தாளில் இப்படியான பொய் செய்திகள் வருவது வழக்கம். இதனை சரிபார்த்து நம் யூடர்ன் தரப்பில் கட்டுரைகளை எழுதியுள்ளோம்.
மேலும் படிக்க : திருக்குறளை மலத்துடன் ஒப்பிட்டு பெரியார் பேசியதாகச் சாட்டை துரைமுருகன் சொன்ன பொய்
மேலும் படிக்க : பெரியார் மணியம்மைக்கு தாலிக் கட்டிய புகைப்படமா ?| உண்மை என்ன ?
முடிவு:
நம் தேடலில் 2017ஆம் ஆண்டு ஒரு பிரெஞ்சு புகைப்படக்காரரால் எடுக்கப்பட்ட ஒரு மூதாட்டியின் புகைப்படத்தை முதன்முதலில் பெரியாரை செருப்பால் அடித்த மூதாட்டி தவறான தகவலோடு பரவி வருகிறது என்பதை அறியமுடிகிறது.
