YouTurn

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளி எனப் பரவும் தவறான புகைப்படம் !

உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளி எனப் பரவும் தவறான புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

சுரங்கத் தொழிலாளியும் சுரண்டல் சுகபோகியும்..

Twitter Link | Archive Link

விரிவான விளக்கம்

த்தரகாண்ட் மாநிலம், உத்தரகாசி அருகே அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சார்தாம் நெடுஞ்சாலை திட்டத்தின் ஒரு பகுதியாக 4.5 கி.மீ. தொலைவுக்கு சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்த நிலையில், கடந்த நவம்பர் 12 அன்று ஏற்பட்ட மண் சரிவின் காரணமாக, சுரங்கப்பாதைக்குள் 41 தொழிலாளர்கள் சிக்கினர். சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளர்கள் மீட்கப்படும் தருணத்தில் உள்ளனர்.

இந்நிலையில் உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளி என்று கூறி வயதான ஒருவரின் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் இந்தப் புகைப்படத்தை பிரதமர் நரேந்திர மோடி திருமலைக் கோவிலில் எடுத்த புகைப்படத்துடன் ஒப்பிட்டும் வைரலாகப் பரப்பி வருகின்றனர்.





உண்மை என்ன ?

பரவி வரும் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்தப் புகைப்படத்தில் இருப்பவர் உத்தரகாசி சுரங்கத்தில் வேலை செய்யும் தொழிலாளி அல்ல என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கடந்த 2019-ல் இருந்தே இந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளதையும் காண முடிந்தது.



கடந்த 2020-லும் Old Age Care Trust என்ற முகநூல் பக்கத்தில் இந்த வயதான நபரின் புகைப்படத்தை குறிப்பிட்டு, மக்களிடம் நன்கொடை வசூலித்துள்ளனர்.



மேலும் படிக்க: உத்தரகாசியில் சுரங்கப்பாதை அமைக்கும் நிறுவனம் அதானிக்கு சொந்தமானதா ?

இதற்கு முன்பும் இதே போன்று பல செய்திகள் சமூக ஊடகங்களில் வைரலாக பரவின. அது குறித்தும் ஆய்வு செய்து நம் பக்கத்தில் கட்டுரைகளாக வெளியிட்டிருக்கிறோம்.

மேலும் படிக்க: நிலக்கரி இறக்குமதி வரியை குறைத்து அதானிக்கு உதவுகிறதா மோடி அரசு ?

முடிவு:

நம் தேடலில், உத்தரகாசி சுரங்கப்பாதையில் சிக்கிய தொழிலாளியின் புகைப்படம் என்று கூறி பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், இது கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது என்பதையும் அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க