
யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
Biharஇந்தியா கூட்டணி.பாஜகவின் முடிவு நெருங்குகிறது. pic.twitter.com/WHx4Ly93NU
— Salma (@salma_poet) March 3, 2024
அக்கூட்டத்தில் எடுக்கப்பட்டது எனப் புகைப்படம் ஒன்றை திமுகவைச் சேர்ந்த சல்மா, ராஜீவ் காந்தி முதற்கொண்டு பலரும் சமூக வலைத்தளத்தில் பரப்புகின்றனர்.
மோடியின் ஆட்சிக்கு இறுதி நாட்களை எண்ண தொடங்கி விட்டார்கள் இந்திய மக்கள் pic.twitter.com/dTkdn21WYj
— R.Rajiv Gandhi (@rajiv_dmk) March 3, 2024
Archive link
பீஹாரில் இந்தியாக்கூட்டணி நடத்திய பிரமாண்டக்கூட்டம்.
மோடிக்கு எதிராக வடக்கிலும் பேரலை. pic.twitter.com/QvgDSzlsOp
— surya xavier (@suryaxavier1) March 3, 2024
Archive link
உண்மை என்ன?
பரவக் கூடிய படத்தைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அதே படத்தை 2017, ஆகஸ்ட் 27ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் (RJD) தலைவர் லாலு பிரசாத் அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதைக் காண முடிந்தது. அதில், காந்தி மைதானம் - பாட்னா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
No "Face" will stand in front of Lalu's "Base". Come & Count as much as u can in Gandhi Maidan, Patna #DeshBachao pic.twitter.com/sXoAcpwNKw
— Lalu Prasad Yadav (@laluprasadrjd) August 27, 2017
மேற்கொண்டு அப்படம் குறித்துத் தேடியதில் ’ஷம்ஷீர் அகமது’ (Shamsheer Ahmed) அவரது பேஸ்புக் பக்கத்தில் 2017, ஆகஸ்ட் 28ம் தேதி இதே போன்ற படம் ஒன்றைப் பதிவிட்டு இருப்பதைக் காண முடிந்தது.

மேலும் ‘ANI’ அவர்களது எக்ஸ் பக்கத்திலும் அப்படத்தை பதிவிட்டுள்ளது. இப்படங்கள் பாஜகவிற்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் 2017ம் ஆண்டு நடத்திய பேரணியில் எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உண்மையில் அக்கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை விட அதிகப்படியாக இருப்பது போன்று போலியாக எடிட் செய்யப்பட்ட படத்தைத்தான் லாலு பிரசாத் பதிவிட்டுள்ளார். இரண்டு படங்களையும் ஒப்பிடும் போது ANI வெளியிட்ட படத்தில் மைதானத்தில் மரங்கள் இருப்பதும் லாலு பிரசாத் பதிவிட்ட படத்தில் அம்மரங்கள் இன்றி மைதானம் முழுவதும் மக்கள் கூட்டம் இருப்பதையும் காண முடிகிறது.

அப்படி 2017ம் ஆண்டு எடிட் செய்யப்பட்ட அப்படத்தினைதான் தற்போது இந்தியா கூட்டணியின் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்டது எனத் தவறாகப் பரப்புகின்றனர்.
2017ம் ஆண்டு பேரணியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் ’Getty Images’ தளத்திலும் உள்ளது. அதில் பரவக் கூடிய படமும் இடம்பெற்றுள்ளது.
முடிவு :
இந்தியா கூட்டணி சார்பில் பீகாரில் நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம் எனப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது 2017ம் ஆண்டு பாஜகவிற்கு எதிராக ராஷ்ட்ரிய ஜனதா தளம் நடத்திய பேரணியின் போது எடுக்கப்பட்டது.
