யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
இந்த மாதிரி பொறுக்கிகள் ஆட்சியில் இருந்தால் நாடு எப்படி உருப்படும். மூத்த காங்கிரஸ் தலைவர் ஒருவர் அவருடைய கட்சியின் பெண் உறுப்பினரை மரியாதையாக வரவேற்ற விதம்..
Twitter Link | Archive Link

Twitter Link | Archive Link
விரிவான விளக்கம்
கட்சியில் புதிதாக இணையும் பெண் நிர்வாகியை வரவேற்கும் நிகழ்ச்சியில், காங்கிரஸ் தலைவர் ஒருவர் தரம் தாழ்ந்து நடந்து கொண்டதாக கூறி 30 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
மேலும் அந்த வீடியோவில், ஒரு பெண்ணுக்கு மாலை அணிவிக்கும் ஒருவர், பின்னர் வலுக்கட்டாயமாக அவருடன் கை குலுக்குவது போன்றும், பறக்கும் முத்தங்களை (flying kisses) கொடுப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை என்ன ?
பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் ஒடிசா காங்கிரஸ் எம்எல்ஏவான தாராபிரசாத் பாஹினிபதி என்பதையும், அவருக்கு அருகில் நிற்கும் பெண் அவருடைய மனைவியும், கட்சியின் நிர்வாகியுமான மீனாக்ஷி பாஹினிபதி என்பதையும் அறிய முடிந்தது.
இது குறித்து கடந்த 2022 டிசம்பர் 29 அன்று News18 Odia தன்னுடைய யூடியூப் பக்கத்தில் "தாராபிரசாத் பாஹினிபதி மேடையில் இருந்து பறக்கும் முத்தம் கொடுத்தார் | அரசியல்வாதி வைரல் வீடியோ | ஒடியா செய்திகள்" என்ற தலைப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த வீடியோ கடந்த 2022-இல் எடுக்கப்பட்டது என்பதை அறிய முடிந்தது.
மேலும் எம்எல்ஏ தாராபிரசாத் பாஹினிபதியின் பேஸ்ஃபுக் பக்கத்தை ஆய்வு செய்து பார்த்தோம். இதே வீடியோவை அவர் டிசம்பர் 28, 2022 அன்று பகிர்ந்திருந்தார்.
மேலும் பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் பெண், தாராபிரசாத் பாஹினிபதியுடன் சேர்ந்து (2015-ல் இருந்தே) பல்வேறு புகைப்படங்களில் இருப்பதையும் காண முடிந்தது.
மேலும் sambadenglish ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில், பரவி வரும் புகைப்படத்தில் இருக்கும் அதே பெண் குறித்து கடந்த ஜூன் 09 அன்று செய்தி வெளியிடப்பட்டிருந்தது. அதில் "ஜெய்பூர் எம்எல்ஏவான தாராபிரசாத் பாஹினிபதியின் மனைவி மினாக்ஷி பாஹினிபதிக்கு பதிலாக துர்கா சங்கர் சாஹு கோராபுட் மாவட்டத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்." என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதன் மூலம் பரவி வரும் வீடியோவில் இருப்பது, அவருடைய மனைவியான மீனாக்ஷி பாஹினிபதி தான் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும் படிக்க: ஸ்மிருதி இரானியை பார்த்து ராகுல் காந்தி ‘Flying kiss’ கொடுத்ததாகப் பாஜகவினர் பரப்பும் பொய் !
மேலும் படிக்க: ராகுல் காந்தி தங்கை பிரியங்காவிற்கு முத்தமிட்ட படத்தை மார்பிங் செய்து பரப்பும் வலதுசாரிகள் !
முடிவு:
நம் தேடலில், கட்சியில் புதிதாக இணையும் பெண்ணிற்கு பறக்கும் முத்தம் கொடுத்த காங்கிரஸ் தலைவர் எனப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், அந்த வீடியோவில் இருப்பவர் அவருடைய மனைவியான மீனாக்ஷி பாஹினிபதி என்பதையும் அறிய முடிகிறது.

(இந்த மாதிரி பொருக்கிகள் ஆட்சியில் இருந்தா நாடு எப்படி உருபடும்)Senior Congress leader welcoming the woman as Congress member with full respect 😇🤣🤣🤣🤦♂️🤦♂️🤦♂️ pic.twitter.com/gTBjEwjGMe
— நரசிம்மன்🇮🇳🕉️🚩 (@Narasim18037507) November 3, 2023