YouTurn

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பொய் பரப்பும் நாதக கார்த்திகா!

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் என்று பொய் பரப்பும் நாதக கார்த்திகா!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது.

பரவிய செய்தி

குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது - கார்த்திகா, நாம் தமிழர் கட்சி

image.png

Youtube Link

விரிவான விளக்கம்

நாம் தமிழர் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி வேட்பாளர் கார்த்திகா புதிய தலைமுறை ஊடகம் நடத்திய கலந்துரையாடல் ஒன்றில் பேசியிருந்தார். அதில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது என்று தெரிவித்திருந்தார். 


உண்மை என்ன? 

கார்த்திகா தெரிவித்த இந்த கருத்துக் குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையை பார்க்கமுடிந்தது. அதில் சரியாக 40வது பக்கத்தில், “2023-ஆம் ஆண்டில் போக்குவரத்து விதிமீறல் வகைகளின் அடிப்படையில் சாலை விபத்துகள்” என்று குறிப்பிட்டு தரவுகள் இருந்ததை பார்க்கமுடிந்தது.


அதில் 2022ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 4,201 ஆக இருந்தது. ஆனால் 2023ஆம் ஆண்டில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த கார்த்திகா உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகம் என்று பரப்பி வருகிறார். 


முடிவு: 

கிடைத்திருக்கும் ஆதாரங்களின் படி, ஒன்றிய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2023-ஆம் ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டி இறந்தவர்களின் எண்ணிக்கை 3,674 ஆக உள்ளது. ஆனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சம் பேருக்கு அதிகமாக உள்ளது என நாதகவை சேர்ந்த கார்த்திகா தவறான தகவலைப் பரப்பி வருகிறார்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க