YouTurn

நலத்திட்டங்களை ரொக்கமாக வழங்கினால் TDS செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

நலத்திட்டங்களை ரொக்கமாக வழங்கினால் TDS செலுத்த வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10% பிடித்தம் செய்த பிறகே வழங்கப்படவேண்டும் - நிர்மலா சீதாராமன்

Twitter link | Archive link

விரிவான விளக்கம்

மிழ்நாடு அரசு மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தினை அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15ம் தேதி தொடங்கப்பட உள்ளது. முதற்கட்டமாக ஒரு கோடி மகளிருக்கு உரிமைத் தொகை அளிப்பதற்காக ரூ.7,000 கோடியை நிதியாக ஒதுக்கியுள்ளது.



Archive link 

இந்நிலையில், மாநில அரசு நலத்திட்டங்களை ரொக்கமாக வழங்கினால் TDS (Tax Deducted at Source) ஆக 10 சதவீதம் பிடித்தம் செய்த பிறகே பயனாளிக்கு மீத தொகையை வழங்க வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியுள்ளதாக புதிய தலைமுறை நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது. 



Archive link 

இந்த நியூஸ் கார்டினை திமுக ஆதரவாளர்கள் நிர்மலா சீதாராமனுக்கு எதிராகக் கருத்து தெரிவித்தும், வலதுசாரிகள் அவருக்கு ஆதரவாகவும் பரப்பி வருகின்றனர்.

உண்மை என்ன ?

ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் புதிய தலைமுறை நியூஸ் கார்டில் உள்ள தகவல் குறித்து ஆய்வு செய்தோம். 50வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் கடந்த 11ம் தேதி (ஜூலை) ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டில்லியில் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு உட்பட பல்வேறு மாநில நிதி அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.



அக்கூட்டம் குறித்து நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களிடம் பேசியது தொடர்பாக புதிய தலைமுறை இரண்டு நியூஸ் கார்டுகளை பதிவிட்டுள்ளது. அவற்றில், செயற்கைக்கோள்களை விண்ணில் ஏவும் சேவைக்கு ஜிஎஸ்டி வரி விலக்கு அளிக்கப்படும்’ , ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட ஆன்லைன் பந்தய விளையாட்டுகளுக்கு 28% ஜிஎஸ்டி என்று மட்டுமே உள்ளது. அந்த இரண்டு கார்டுக்கும் ஒரே படத்தினை பயன்படுத்தியுள்ளனர். 

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் குறித்து ஒன்றிய நிதியமைச்சர் அளித்த செய்தியாளர் சந்திப்பு ‘ANI’ யூடியூப் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், பரவக் கூடிய நியூஸ் கார்டில் இருப்பது போன்று எந்த கருத்தையும் அவர் தெரிவிக்கவில்லை.



இவற்றில் இருந்து பரவக் கூடிய நியூஸ் கார்டை புதிய தலைமுறை வெளியிடவில்லை என்பதும், அது போலியாக எடிட் செய்து பரப்பப்பட்டு வருகிறது என்பதையும் அறிய முடிகிறது. மேலும், ஒன்றிய நிதியமைச்சரும் அப்படி எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

மேலும் படிக்க : ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

இதற்கு முன்னதாக நிர்மலா சீதாராமன் குறித்து பரப்பப்பட்ட பல்வேறு போலிச் செய்திகள் குறித்த உண்மைத் தன்மைகளை யூடர்னில் கட்டுரையாக வெளியிட்டுளோம்.

மேலும் படிக்க : நிர்மலா சீதாராமன் தந்தையின் எளிமையான வீடு எனப் பரப்பப்படும் பாரதியாரின் உறவினர் வீடியோ !

முடிவு : 

நம் தேடலில், மாநில அரசின் நலத்திட்டங்கள் ரொக்கத் தொகையாக வழங்கப்பட்டால் TDS ஆக 10% பிடித்தம் செய்ய வேண்டும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் தகவல் உண்மை அல்ல. அது போலியாக எடிட் செய்யப்பட்டது. அப்படி எந்த கருத்தும் அவர் தெரிவிக்கவில்லை என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க