YouTurn

ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாகப் பரவும் போலிச் செய்தி !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

விரைவில் விலை குறையும்: அயோத்தியில் ஸ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டிமுடித்ததும் தக்காளி உட்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

Twitter Link

விரிவான விளக்கம்

பொதுவாக பருவமழை சீராக இல்லாததாலும், விளைபொருட்களை சரியான நேரத்தில் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லமுடியாத காரணத்தினாலும் இந்தியாவில் காய்கறிகள் விலை அடிக்கடி கூடுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. இந்நிலையில் தற்போது தக்காளியின் வரத்து குறைந்துள்ளதால் இந்தியாவின் பெரும்பான்மையான மாநிலங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ 130 வரை விற்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அயோத்தியில் ஸ்ரீராமபெருமானின் திருக்கோயில் கட்டிமுடித்ததும் தக்காளி உட்பட அனைத்து பொருட்களின் விலையும் குறையும்" என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாக தந்தி டிவியின் நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Twitter Link



உண்மை என்ன?

பரவி வரும் நியூஸ் கார்டு குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், தந்தி டிவி இது தொடர்பாக எந்த நியூஸ் கார்டும் வெளியிடவில்லை என்பதை அறிய முடிந்தது.

மேலும் இது தொடர்பாக தந்திடிவி சேனலின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தளப் பக்கங்களில் தேடியதில், ‘தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை’ என்னும் தலைப்பில் கடந்த ஜூலை 01 அன்று நியூஸ் கார்டு ஒன்றை வெளியாகி இருக்கிறது..



அதில் “சென்னையில் தக்காளியின் மொத்த விலை மேலும் ரூ15 அதிகரிப்பு. கோயம்பேடு காய்கறி சந்தையில் ரூ75-க்கு விற்ற தக்காளி, தற்போது ரூ90-க்கு விற்பனை. சில்லறை விற்பனை நிலையங்களில் ரூ100 முதல் ரூ120 வரை விற்பனை. பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் 60 ரூபாய்க்கு விற்பனை.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து நிர்மலா சீதாராமன் ஏதாவது செய்திகள் வெளியிட்டிருக்கிறாரா என்பது குறித்து அவருடைய அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தேடியதில, பரவி வரும் செய்திகள் தொடர்பாக அவர் எந்த கருத்துகளையும் தெரிவிக்கவில்லை என்பதும் உறுதியானது.



இதன் மூலம் “தொடர்ந்து அதிகரிக்கும் தக்காளி விலை” என்னும் தலைப்பில் வெளியிடப்பட்ட தந்தி டிவியின் நியூஸ் கார்டை  எடிட் செய்து பரப்பியுள்ளனர் என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : ‘குடியுரிமை தக்கவைப்பு வரி’ அமல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்ததாகப் பரவும் போலி செய்தி

மேலும் படிக்க : வெங்காயம் சாப்பிடாததால் கவலையில்லை என நிர்மலா சீதாராமன் கூறினாரா ? 

முடிவு:

நம் தேடலில், அயோத்தியில் ராமர் கோவில் கட்டி முடித்ததும் தக்காளி விலை குறையும் என நிர்மலா சீதாராமன் கூறியதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தந்தி டிவியின் நியூஸ் கார்டு போலியானது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க