YouTurn

ஸ்ரீநகர் to டெல்லி NH44 சாலையின் பணிகள் முடிவடைந்து விட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

ஸ்ரீநகர் to டெல்லி NH44 சாலையின் பணிகள் முடிவடைந்து விட்டதாக பரவும் வீடியோ! உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

சீனாவில் கட்டப்பட்ட பேய்பாஞ்சியாங் பாலத்தின் பழைய வீடியோவை, ஸ்ரீநகர் முதல் டெல்லி வரையுள்ள NH44 சாலை என்று குறிப்பிட்டு பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது.

பரவிய செய்தி

காங்கிரஸ் இது முடியாது என்ற திட்டங்கள் பல.... என பல திட்டங்களை முடித்து நாட்டுக்கு அர்ப்பணித்து வருகிறது பிரதமர் மோடி..! அதில் ஸ்ரீநகர் to டெல்லி NH44 பணிகள் முடிவடைந்தது...!!

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே செனாப் நதியின் குறுக்கே, ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த ரயில் பாலத்தை ஜூன் 6ஆம் தேதி பிரதமர் மோடி திறந்து வைத்தார். 

இந்நிலையில் ஸ்ரீநகர் to டெல்லி NH44 சாலையின் பணிகள் முடிவடைந்து விட்டதாக கூறி நொடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன?

பரவி வரும் காணொளியை, சமீபத்தில் திறக்கப்பட்ட செனாப் ரயில் பாலத்துடன் தொடர்புப்படுத்திப் பார்த்தோம். காணொளியில் உள்ளது போக்குவரத்து சாலை என்பதால், அதற்கும் செனாப் ரயில் பாலத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்பது தெரியவந்தது. 


இதையடுத்து பரவி வரும் காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது highestbridges. com என்ற இணையதளப்பக்கத்தில் சீனாவில் உள்ள Beipanjiang Railway Bridge குறித்து பழைய புகைப்படங்களைப் பார்க்கமுடிந்தது. 2014 வரை இருக்கும் அந்த புகைப்படங்களை, பரவி வரும் காணொளியுடன் தொடர்புப்படுத்திப் பார்க்கும் போது இரண்டும் ஒரே மாதிரியாக இருப்பதைப் பார்க்கமுடிந்தது. 

image.png


மேலும் இது குறித்துத் தேடிய போது, HIGHLIGHTS CHINA என்ற யூடியூப் பக்கத்தில், ”Bridge to the Sky. World's Highest Bridge.Beipanjiang Bridge.Guizhou” என்ற தலைப்பில் ஏப்ரல் 30, 2023 அன்று பரவி வரும் காணொளிப் பதிவாகியிருந்ததைக் காணமுடிந்தது. 


முடிவு:

நம் தேடலில், சீனாவில் கட்டப்பட்ட பேய்பாஞ்சியாங் பாலத்தின் பழைய வீடியோவை, ஸ்ரீநகர் முதல் டெல்லி வரையுள்ள NH44 சாலை என்று குறிப்பிட்டு பாஜகவினர் பலரும் சமூக ஊடகங்களில் தவறாகப் பரப்பி வருவது தெரியவந்தது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

தவறானது

'மெரினாவில் வைக்கவிருந்த பேனா சிலை அகற்றப்படும் காட்சி' என்று பரவும் செய்தி! உண்மை என்ன?

கடந்த 2023 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பேனா வடிவிலான “முத்தமிழ் தேர் அலங்கார ஊர்தி” பயணம் மேற்கொண…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க