யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
பரவிய செய்தி
யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்...? வேற யாரு நம்ம மோடிஜி தான் டாப்...
X post link | Archive link

X post link | Archive link
விரிவான விளக்கம்
‘யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்...?’ என்ற தலைப்பில் தந்தி டிவி நடத்திய கருத்துக் கணிப்பில் நரேந்திர மோடிக்கு 93 சதவீதமும், ராகுல் காந்திக்கு 6 சதவீதமும், இவர்களைத் தவிர்த்து வேறு யாரவது பிரதமராக வரலாம் என ஒரு சதவீதத்தினரும் கூறியுள்ளதாக தந்தி டிவி கார்டு ஒன்று பாஜக கன்னியாகுமரி பிரிவின் எக்ஸ் (டிவிட்டர்) பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.

X post link
இதே கார்டினை பதிவிட்டு, தந்தி டிவி கடந்த மாதம் ராகுல் காந்திக்கு ஆதரவாகக் கருத்துக் கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. இந்த மாதம் மோடிக்கு ஆதரவாக முடிவுகளை வெளியிட்டுள்ளது என விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடியதில் 2018, நவம்பர் 19ம் தேதி ‘யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்...?’ என்கிற அதே தலைப்பு மற்றும் அதே டிசைனில் தந்தி டிவி அவர்களது எக்ஸ் பக்கத்தில் கார்டு ஒன்றினை பதிவிட்டுள்ளது.
அதில், நரேந்திர மோடிக்கு 19 சதவீதம், ராகுல் காந்திக்கு 36 சதவீதம், 3வது நபருக்கு 45 சதவீதத்தினரும் அடுத்த பிரதமருக்கு ஆதரவு தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கருத்துக் கணிப்பு தொடர்பாகத் தந்தி டிவி, மாலை மலர் இணையதளங்களில் வெளியான செய்தியிலும் இதே எண்ணிக்கையைக் காண முடிகிறது. பரவக் கூடிய கார்டில் இருப்பது போன்று எந்த எண்ணிக்கையும் அவர்களது பக்கத்தில் இல்லை.

மேலும் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டியும் தந்தி டிவி இதே போன்ற கருத்துக் கணிப்புகளை மாதந்தோறும் வெளியிட்டு வருகிறது. அப்படி கடைசியாகக் கடந்த அக்டோபர் மாதம் 24ம் தேதி வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ராகுல் காந்திக்கு 68 சதவீதம், நரேந்திர மோடிக்கு 31 சதவீதம், மற்றவர்களுக்கு 1 சதவீதம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த கருத்துக் கணிப்பானது "தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட செப்டம்பர் மாத கருத்து கணிப்பு" என்றும் அவர்களது பேஸ்புக் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : தந்தி டிவி கருத்துக் கணிப்பில் தமிழ்நாட்டில் மோடிக்கு ஆதரவு அதிகரித்ததாக பொய் பரப்பும் பாஜகவினர் !
இதே போன்று தந்தி டிவி கருத்துக் கணிப்பையொட்டி இதற்கு முன்னரும் பல போலி செய்திகள் பரப்பப்பட்டது. அவற்றைப் பற்றி உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க : மத்தியில் ஆட்சி மாற்றத்தை விரும்பும் இந்தியர்கள் எனப் பரவும் தந்தி டிவியின் பழைய கருத்துக் கணிப்பு !
முடிவு :
நரேந்திர மோடி அடுத்த பிரதமராக வர வேண்டுமென 93 சதவீதத்தினர் கருத்து தெரிவித்துள்ளதாகத் தந்தி டிவி பெயரில் பரவும் தகவல் உண்மை அல்ல. அது எடிட் செய்யப்பட்டது.
தந்தி டிவி கடைசியாக அக்டோபர் மாதம் வெளியிட்ட கருத்துக் கணிப்பில் ராகுல் காந்திக்கு தான் 68 சதவீதம் ஆதரவு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது என்பதை அறிய முடிகிறது.

முதலில் உள்ளது ஜூன் 12 தந்தி வெளியிட்ட கருத்துக் கணிப்பு.
Vs
இரண்டாவது சமீபத்திய கருத்துக் கணிப்பு.
தந்திக்கு கொடுப்பதில் ஏதாவது மீதம் வைத்து விட்டார்களோ!? 🤔🤔 pic.twitter.com/6JihhoNCL0
— Skm (@vasudevakudumba) November 23, 2023
உண்மை என்ன ?
பரவக் கூடிய நியூஸ் கார்டை ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் செய்து தேடியதில் 2018, நவம்பர் 19ம் தேதி ‘யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்...?’ என்கிற அதே தலைப்பு மற்றும் அதே டிசைனில் தந்தி டிவி அவர்களது எக்ஸ் பக்கத்தில் கார்டு ஒன்றினை பதிவிட்டுள்ளது.
#ThanthiTVOpinionPoll : யார் பிரதமராக வேண்டும் என நீங்கள் நினைக்கிறீர்கள்...?#MakkalYaarPakkam | #PrimeMinister | @KrishInfoMedia pic.twitter.com/B7Jn3M1OeO
— Thanthi TV (@ThanthiTV) November 19, 2018