YouTurn

நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

நேரு கையில் வாளியுடன் இருப்பதாகப் பரப்பப்படும் போலியாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

கூடை தூக்கி பாத்திருப்போம்… சொம்பு தூக்கி பாத்திருப்போம்.. வாளி தூக்கி பாத்ததில்லை… நேரு மாமா



Archive link 

விரிவான விளக்கம்

ந்தியாவின் முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு இந்தியாவின் கடைசி வைஸ்ராயான மவுண்ட்பேட்டனின் மனைவி எட்வினாவுடன் செல்லும் போது கையில் வாளி எடுத்துக் கொண்டு செல்வதாகப் புகைப்படம் ஒன்று வலதுசாரி ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.



Archive link



Archive link

உண்மை என்ன ? 

பரவக் கூடிய படத்தினை கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சேர்ச் மூலம் தேடுகையில், ‘Himachal Archives’ எனும் பேஸ்புக் பக்கத்தில் பரவக் கூடிய படத்துடன் வேறு சில படங்களையும் சேர்த்துத் தொகுப்பாகப் பதிவிட்டிருப்பதைக் காண முடிந்தது. அப்பதிவில் 1948ம் ஆண்டு மே மாதம் விடுமுறையின் போது சிம்லாவில் அப்போது பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



Himachal Archives உள்ள அப்பதிவில் ‘நன்றி : புகைப்படப் பிரிவு, இந்திய அரசு’ என்றுள்ளது. இந்திய அரசால் வெளியிடப்பட்ட அந்த படத்தில் நேருவின் கையில் வாளி எதுவும் இல்லை



மேலும் இது பற்றித் தேடியதில், ‘wiki media’ எனும் தளத்திலும் நேரு மற்றும் மவுண்ட்பேட்டனின் மனைவி இருக்கக்கூடிய புகைப்படம் பதிவிடப்பட்டுள்ளது. அதிலும் நேருவின் கையில் வாளி இல்லை.



அதே போல் 'Get Archive' மற்றும் 'Picryl' போன்ற தளங்களிலும் நேரு மற்றும் மவுண்ட்பேட்டன் குடும்பத்தினர் 1948ம் ஆண்டு சிம்லா சென்ற புகைப்படங்கள் உள்ளது. இவற்றைக் கொண்டு பரவக் கூடிய படம் போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.

மேலும் படிக்க : நேரு இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவு 30A-வை சேர்த்ததாக பாஜகவினர் பரப்பும் வதந்தி !

இதற்கு முன்னர் ஜவஹர்லால் நேருவை இந்துக்களுக்கு எதிராக அரசியலமைப்பு சட்டப் பிரிவில் 30A-வை சேர்த்ததாகவும், அவர் ஆர்.எஸ்.எஸ். பயிற்சியில் கலந்து கொண்டதாகவும் போலி செய்திகளைப் பரப்பினர். அவற்றின் உண்மைத் தன்மை குறித்து யூடர்னில் கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : அரை டவுசருடன் நேரு : இது ஆர்.எஸ்.எஸ் பயிற்சி அல்ல

முடிவு : 

நம் தேடலில், ஜவஹர்லால் நேரு கையில் வாளி உடன் செல்வதாக பரப்பப்படும் புகைப்படம் உண்மையானது அல்ல. அப்படத்தைப் போலியாக எடிட் செய்து பரப்பி வருகின்றனர் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க