YouTurn

நீட் தேர்வு மோசடியில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைது எனப் பரவும் போலிச் செய்தி!

நீட் தேர்வு மோசடியில் தொடர்புடையவர்கள் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் கைது எனப் பரவும் போலிச் செய்தி!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

நீட் வழக்கு. ஜார்கண்ட் டியோகர் காங்கிரஸ் அலுவலகத்தில் பதுங்கியிருந்த 6 பேரை சிபிஐ கைது செய்தது 


X link

விரிவான விளக்கம்

MBBS, BDS உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு நாடு முழுவதும் கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதனை ஆன்லைன் மூலம் தேசியத் தேர்வு முகமை நடத்தியது. இத்தேர்வில் முறைகேடு நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் இதனை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிடவேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இந்நிலையில் ஒன்றிய கல்வித்துறை வெளியிட்ட அறிக்கையில் நீட் தேர்வில் முறைகேடுகள், ஆள்மாறாட்டம் நடந்திருப்பதாக எழுந்துள்ள புகாரை சி.பி.ஐ விசாரிக்கும் என உத்தரவிட்டது. 



இதில் தொடர்புடைய 6 பேரை ஜார்கண்ட் மாநிலம் தியோகர் (Deoghar) பகுதியில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்திலிருந்து சி.பி.ஐ கைது செய்ததாக வீடியோ ஒன்று வலதுசாரிகளால் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது. 

உண்மை என்ன?

பரவக்கூடிய வீடியோவில் ‘ANI’ லோகோ இருப்பதைக் காணமுடிகிறது. எனவே இதுதொடர்பாக அவர்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் தேடினோம். இதே வீடியோ கடந்த 23ஆம் தேதி அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 



அப்பதிவில், இளங்கலை நீட் தேர்வு மோசடி தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகள் பாட்னாவில் உள்ள LNJP மருத்துவமனையில் மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்ட பிறகு காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டனர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும் இவர்கள் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் (Deoghar) பகுதியில் கடந்த 21ஆம் தேதி கைது செய்யப்பட்டதாக அப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக The Economic Times’ வெளியிட்ட செய்தியிலும் இதே தகவல் இடம்பெற்றுள்ளது.

நீட் மோசடி கைது குறித்து வெளியான எந்தச் செய்தியிலும் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்திலிருந்து யாரையும் கைது செய்ததாகக் குறிப்பிடவில்லை. ஜார்க்கண்டில் கைது செய்யப்பட்டவர்களை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்திவிட்டு காவல்துறையினர் அழைத்துச் செல்லும்போது எடுக்கப்பட்ட வீடியோவை காங்கிரஸ் கட்சி அலுவலகம் எனத் தவறாகப் பரப்புகின்றனர்.

நீட் தேர்வு மட்டுமின்றி யுஜிசி- நெட் தேர்விலும் மோசடி நடந்திருக்க முகாந்திரம் இருப்பதாகக் கூறி இத்தேர்வுகளை ஒன்றிய கல்வி அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

முடிவு: 

நம் தேடலில், நீட் தேர்வு மோசடியில் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகர் பகுதியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலிருந்து 6 பேர் கைது செய்யப்பட்டதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் உண்மை அல்ல, என்பது தெளிவாகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.