யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
2024க்கு பிறகு பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது.
பரவிய செய்தி
Chennai, Tamil Nadu: BJP State President Nainar Nagendran says, "For the welfare of Tamil Nadu, Edappadi K. Palaniswami brought 11 medical colleges during his tenure. What has the DMK brought in the last five years? They have not been able to get anything from Delhi"

விரிவான விளக்கம்
கடந்த 5 வருடத்தில் திமுக அரசு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை என்றும், ஒன்றிய அரசிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
Chennai, Tamil Nadu: BJP State President Nainar Nagendran says, "For the welfare of Tamil Nadu, Edappadi K. Palaniswami brought 11 medical colleges during his tenure. What has the DMK brought in the last five years? They have not been able to get anything from Delhi" pic.twitter.com/P2vfxMpvcM
உண்மை என்ன?
முதலில் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறப்பது குறித்து தேடிப் பார்த்தோம். அப்போது The South First ஊடகப்பக்கத்தில் ”New NMC guidelines won’t allow new medical colleges, seats in any state of South India”
என்ற தலைப்பில் செப்டம்பர் 25, 2023 அன்று செய்தி ஒன்று வெளியாகியிருந்தது.

அதில் 2023ஆம் ஆண்டு national medical council புதிய விதி ஒன்றை கொண்டுவந்தது. அதன் படி, 10 லட்சம் மக்களுக்கு 100 medical seatக்கு மேல இருக்கக்கூடாது என்று கொண்டுவரப்பட்டது. இந்த விதியின் அடிப்படையில் பார்க்கையில், தமிழ்நாட்டில் ஏற்கனவே 10 லட்சம் மக்களுக்கு 100 medical seatக்கு மேல் அதிகமாக இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டில் புதிய மருத்துவ கல்லூரிகள் திறக்கமுடியாது என்ற நிலை ஏற்பட்டது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இது குறித்து மேலும் தேடிப் பார்த்தப் போது, The Hindu ஊடகத்தில் “National Medical Commission’s latest order on seat allocation viewed as unfair to southern States” என்ற தலைப்பில் அக்டோபர் 02, 2023 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் இந்த புதிய விதி கடுமையான எதிர்ப்புக்கு உள்ளாக்கப்பட்டது. தமிழ்நாடு, கர்நாடக, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்த விதியை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த எதிர்ப்பின் அடிப்படையில் இந்த விதி நிறுத்தி வைக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

அதே போல் The Hindu ஊடகத்தில் ”T.N. CM Stalin urges PM Modi, to put on hold, restrictions on opening of new medical colleges” என்ற தலைப்பில் ஒரு செய்தி வெளியாகியிருந்தது. அதில் புதிய மருத்துவக் கல்லூரிகள் திறப்பதற்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள தேசிய மருத்துவ ஆணையம் (NMC) வெளியிட்டுள்ள அறிவிக்கையை நிறுத்தி வைக்குமாறும், மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும் எனவும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 2023 அக்டோபர் 4 அன்று பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுத்தார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இதையடுத்து ஒன்றிய அரசிடம் தமிழ்நாட்டில் மருத்துவ கல்லூரி கட்டுவதற்கு திமுக அரசு எந்த கோரிக்கையும் வைக்கவில்லையா என்பதை தேடினோம். அப்போது The Hindu ஊடகத்தில் “TN seeks nod for medical colleges in six districts, says Health Minister Ma. Subramanian” என்ற தலைப்பில் மார்ச் 06, 2025 அன்று செய்தி வெளியாகியிருந்தது. அதில் 2024க்கு பிறகு பெரம்பலூர், மயிலாடுதுறை, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம் ஆகிய 6 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகள் அமைப்பதற்கு அனுமதியளிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக ஒன்றிய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டிருந்தது.

முடிவு:
எனவே, கடந்த 5 வருடத்தில் திமுக அரசு தமிழ்நாட்டில் ஒரு மருத்துவ கல்லூரி கூட கொண்டுவரவில்லை என்றும், ஒன்றிய அரசிடம் இது குறித்து எதுவும் கேட்கவில்லை என்றும் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பரப்பி வருவது தவறான தகவலாகும்.