YouTurn

ராகுல் காந்தி முன்பே இஸ்லாமியர்கள் இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று கூறினாரா?

ராகுல் காந்தி முன்பே இஸ்லாமியர்கள் இந்தியாவை கைப்பற்ற வேண்டும் என்று கூறினாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

பரவி வரும் வீடியோ கடந்த 2016-ஆம் ஆண்டு, ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிச்சௌச்சா ஷெரீப் தர்காவிற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட பழைய வீடியோ ஆகும்.

பரவிய செய்தி

அமைதி மார்க்கத்தினரின் தொழுகையின் போது அங்குள்ள மௌலானா, இந்தியாவை விரைவில்  இஸ்லாமியர்கள் கைப்பற்ற வேண்டும், அதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அல்லாஹ் அவர்களுக்கு வழங்குமாறு இறைவனிடம் வேண்டுவதை,

கூட நின்று வேடிக்கை பார்க்கிறது நம்ம இத்தாலி வாரிசு பப்பு..!



X Link | Archive Link 

விரிவான விளக்கம்

“இந்தியாவை விரைவில் இஸ்லாமியர்கள் கைப்பற்ற வேண்டும், அதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அல்லாஹ் வழங்க வேண்டும்” என்று இஸ்லாமியர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் அருகில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் நின்று கொண்டிருக்கிறார்” என்று கூறி வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. 



உண்மை என்ன? 


பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் தேடிப் பார்த்ததில், கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பரில் “Samay Live” என்ற யூடியூப் பக்கத்தில் பரவி வரும் வீடியோ குறித்து செய்தி வெளியிடப்பட்டிருந்தது. 


அதில், ராகுல் காந்தி உத்தரப் பிரதேசத்தில் உள்ள கிச்சௌச்சா ஷெரீப் தர்காவிற்குச் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. 




மேலும் அங்குள்ள இஸ்லாமியர்கள் பாடும் பாடலை மொழிப்பெயர்த்து பார்த்ததில், அவர்கள் “இதுவே நமது தலைவிதி. அவர் மீது சாந்தி நிலவட்டும். அவர்களும் இதே காரணத்திற்காகவே வந்துள்ளனர். அவர்கள் செல்வத்தை விரும்புவதில்லை; மாறாக, தங்கள் கைகளுக்கு வலிமையைத் தேடுகிறார்கள். அவர்கள் பிரிவினைவாத சக்திகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள். அவர்கள் தங்கள் பகலையும் இரவையும் ஒன்றாக்கிக் கொண்டுள்ளனர்; அவர்களுக்கு உறங்கவோ, விழித்திருக்கவோ, நடக்கவோ நேரமில்லை. இந்தியாவில் பிரிவினைவாதம் முடிவுக்கு வர வேண்டும் என்பதே அவர்களின் ஒரே விருப்பம். சகோதரத்துவம் மீண்டும் நிலைநாட்டப்படட்டும். நீங்கள் இந்த இந்திய மண்ணிற்குக் கொண்டு வந்த அமைதியின் செய்தி - அதே அமைதி மீண்டும் இந்தியாவில் நிலவ வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள். அவர்களுக்கு வலிமையைக் கொடுங்கள்“ என்றே குறிப்பிட்டு பாடுகின்றனர். 


எந்த இடத்திலும் அவர்கள், “இந்தியாவை விரைவில் இஸ்லாமியர்கள் கைப்பற்ற வேண்டும், அதற்கான ஆக்கத்தையும் ஊக்கத்தையும் அல்லாஹ் வழங்க வேண்டும்” என்று கூறவில்லை. இந்நிலையில் தவறான செய்தியைப் பரப்பி வருகின்றனர். 


முடிவு: 


நம் தேடலில், ராகுல் காந்தி முன்பே இஸ்லாமியர்கள் “இந்தியாவை விரைவில் இஸ்லாமியர்கள் கைப்பற்ற வேண்டும்” என்று கூறுவதாகக் கூறி பரவி வரும் செய்திகள் தவறானவை என்பதை அறிய முடிகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க