YouTurn

இஸ்லாமியர் ஒருவர் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவும் ஏஐ வீடியோ!

இஸ்லாமியர் ஒருவர் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவும் ஏஐ வீடியோ!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆண்டுகளாக சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாமியர்களை குறித்து ‘எச்சில் ஜிகாத்’ என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

பரவிய செய்தி

இந்துக்களே! 

கொள்ளை அடிக்க வந்த அன்னிய வந்தேறி முகலாயன் வாளுக்கு பயந்து மதம் மாரிய 

எச்ச அன்னிய கூட்டத்துக்குப் பொறந்த இவனுக நடத்துற ஹோட்டலில் போய் எச்சி சோறு தின்னுதான் உங்க வயிற வளர்க்கனுமா? 

image.png

Facebook Link / Archived Link

விரிவான விளக்கம்

உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


உண்மை என்ன? 

உண்மையில் இப்படி ஒரு சம்பவம் நடந்ததா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் எந்தவொரு ஊடகங்களிலும் இது குறித்தான செய்திகள் வெளியாகியாகவில்லை. 


இதையடுத்து அந்த வீடியோவில் எச்சில் துப்புவது செயற்கையாக இருப்பதை பார்க்கமுடிந்தது. இதனால் இது AI மூலம் உருவாக்கப்பட்டிருக்குமோ என்ற சந்தேகத்தால், பரவி வரும் வீடியோவை Hive Moderation இணையதளப்பக்கத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்தோம். ஆய்வின் முடிவில் பரவி வரும் வீடியோ, AI மூலம் உருவாக்கப்பட்டது என்பது உறுதியானது. 


மேலும் கடந்த சில ஆண்டுகளாக சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாமியர்களை குறித்து ‘எச்சில் ஜிகாத்’ என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள். The Wire ஊடகத்தில் இது குறித்தான கட்டுரை ஒன்றை பார்க்கமுடிந்தது. அதில் ’இஸ்லாமியர்கள் எல்லா இடங்களிலும் எச்சில் துப்பும் பழக்கமுள்ள அநாகரிகமானவர்கள்’, ’அவர்கள் கடையில் விற்கும் பொருட்களில் எச்சில் துப்பி தான் கொடுப்பார்கள்’ என்பது போன்ற பொய் பிரச்சாரங்களை ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின் மீதும் மத ரீதியான காழ்ப்புணர்வை விதைக்கும் வகையில் தொடர்ந்து பரப்பி வருகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. 

image.png


முடிவு: 

நம் தேடலில், உணவுக் கடை நடத்தும் இஸ்லாமியர் ஒருவர் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கும் உணவில் எச்சில் துப்பிக் கொடுப்பதாக பரவுவது ஏஐ தொழில்நுட்பத்தால் உருவானதாகும். கடந்த சில ஆண்டுகளாக சங்க பரிவார அமைப்புகள் இஸ்லாமியர்களை குறித்து ‘எச்சில் ஜிகாத்’ என்ற பொய் பிரச்சாரத்தை செய்து வருகிறார்கள்.

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த நோயாளி ஒரு ரூபாய் கூட மருத்துவக் கட்டணம் செலுத்த தேவையில்லையா?

பரவி வரும் செய்தி குறித்து தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் ஏதேனும் அறிவிப்பு வெளியாகியுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். ஆனால் அதில் இது குறித்தான எந்…

பொய்

சீன இராணும் இந்தியாவிற்குள் ஊடுருவியதா? தவறாக பரப்பப்படும் வீடியோக்கள்!

இந்த வீடியோகள் தாய்லாந்து நாட்டின் இராணுவம் அவர்களது நாட்டில் அணிவகுப்பு மேற்கொண்ட போதும், மணிப்பூரில் ’அசாம் ரைபில்ஸ்’ படையினர் ஊருக்குள் நுழைவதை மக்கள் எதிர்…

பொய்

பின்னணி பாடகருக்கான முதல் தேசிய விருதை எஸ்.ஜானகி வென்றதாக தவறான செய்தி வெளியிட்ட தந்தி டிவி!

16 ஆவது தேசிய விருதுகள் விழாவில் சிறந்த பெண் பின்னணி பாடகர் விருதும் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி பெண் பாடகருக்கான விருதை பி.சுசீலா உயர்ந்த மனிதன் திரைப்படத்திற…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க