யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
பரவி வரும் காணொளி மே 16ஆம் தேதி முதலே பல்வேறு சமூகவலைதளப்பக்கங்களில் பார்க்க முடிகிறது. மேலும் இது மகாராஷ்ட்ராவில் சிவ சேனா கட்சியினர் காரில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவாகும்.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
மதுரையில் வருகிற 22-ந் தேதி இந்து முன்னணி சார்பில் முருக பக்தர்கள் மாநாடு நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டிற்கு எடப்பாடி பழனிசாமி, சீமான் உள்ளிட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் முருகன் கொடிகளை காரில் கட்டிக்கொண்டு ஊர்வலமாக செல்வது போன்ற வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
முருகன் கொடி பறக்குதா!!!🔥💥🔥#MuruganManadu#முருகபக்தர்கள்மாநாடு#முருக_பக்தர்கள்_மாநாடு pic.twitter.com/jTg3VP3BRH
உண்மை என்ன?
பரவி வரும் காணொளியில் இருக்கும் பேனரில் yuva bharat health policy என்பது ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதியிருந்ததைக் காணமுடிந்தது. இதை வைத்துப் பார்க்கும் போது, இது தமிழ்நாடு இல்லை என்பது தெளிவானது.

இதையடுத்து இந்த காணொளியைக் கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது swaraj_babar_7007 என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்திற்கு அழைத்துச் சென்றது. அதில் மே 16ஆம் தேதி “ஏராளமான ஆர்வலர்களுடன் மும்பைக்குப் புறப்பட்டார்” என்ற caption உடன் பரவி வரும் காணொளிப் பதிவாகியிருந்ததைக் காணமுடிந்தது.
இது குறித்து மேலும் தேடிய போது, shivsena_bhvan, _eknathshinde_fanclub போன்ற இன்ஸ்டாகிராம் பக்கங்களிலும் இதே காணொளி மே 18ஆம் தேதி பதிவாகியிருந்ததைப் பார்க்கமுடிந்தது. அதில் சிவசேனா என்று குறிப்பிடப்பட்டிருந்ததைப் பார்க்கமுடிந்தது.
முடிவு :
நம் தேடலில், பரவி வரும் வீடியோ சிவ சேனா கட்சியினர் காரில் ஊர்வலமாக சென்ற போது எடுக்கப்பட்ட வீடியோவாகும். இதை முருக பக்தர்கள் மாநாட்டிற்கு என்று தவறாக பரப்புகின்றனர்.
