YouTurn

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு சொன்ன பொய் !

பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு சொன்ன பொய் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த மனநலம் குன்றியவர் மீது ஒருவர் சிறுநீர் கழித்த காட்சி மிகவும் பயங்கரமான மற்றும் கவலைக்குரிய சம்பவம். இவை ஆணவம், உணர்வின்மை மற்றும் கொடூரமான குற்றம். அவர் கைது செய்யப்பட்டு உள்ளார். ஆனால், அது போதாது, அவருக்கு பாடம் கற்பிக்க வேண்டும். எதிர்க்கட்சிகள் கூறுவது போல் அவர் பாஜக உறுப்பினர் அல்ல. மேலும், இதுபோன்ற குற்றங்கள் அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். 

Twitter link | Archive link 

விரிவான விளக்கம்

த்தியப் பிரதேச மாநிலத்தின் சித்தி மாவட்டத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. மனிதத்தன்மையற்ற இச்செயலை செய்த பிரவேஷ் சுக்லா சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லாவின் முன்னாள் பிரதிநிதி எனக் கூறி பல்வேறு கண்டனங்கள் எழுந்தன.

சமூக வலைதளம் மற்றும் எதிர்க்கட்சிகள் தரப்பில் கண்டனங்கள் எழுந்த உடன், இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க மத்தியப்பிரதேச மாநில முதலமைச்சர் சிவராஜ் செளகான் உத்தரவு பிறப்பித்ததாக ட்விட்டரில் பதிவிட்டு இருந்தார்.



Twitter link  

மேலும், அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், குற்றவாளி என்பவர் குற்றவாளி மட்டுமே. அவருக்கு சாதியோ, மதமோ, கட்சியோ கிடையாது. குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்து உள்ளதாக தெரிவித்து இருந்தார்.



Twitter link 

இதையடுத்து, பிரவேஷ் சுக்லா மீது எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் பிரவேஷ் சுக்லா கைது செய்யப்பட்டு உள்ளார்.



குற்றவாளி பாஜக உறுப்பினர் : 




.

பிரவேஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என்று சமூக வலைதளங்களில் பரவிய தகவலை மத்தியப் பிரதேச காங்கிரஸ் கட்சியின் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அம்மாநில பாஜக தரப்பில் மறுக்கப்பட்டு வருகிறது.






Twitter link 

சித்தி தொகுதி பாஜக எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அளித்த பேட்டியில், " அந்த நபர் என்னுடைய பிரதிநிதி அல்ல, பாஜக அலுவலக பொறுப்பாளரும் அல்ல. குற்றச்சாட்டப்பட்ட நபருக்கு எதிராக பாஜக உள்ளது என்றும், எஸ்.டி/எஸ்.டி சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது " என்றும் தெரிவித்து உள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டு இருக்கிறார்.







இதையடுத்து, பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்தவர் தொடர்பான பதிவில், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் குற்றவாளி பாஜவை உறுப்பினர் அல்ல என்ற வார்த்தையை பாஜகவைச் சேர்ந்த குஷ்பு பதிவிட்டு இருந்தார்.




Facebook link



Facebook link 

ஆனால், பிரவேஷ் சுக்லாவின் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதள பக்கங்களில் அவரின் பாஜக கட்சி உறுப்பினர் அட்டை பதிவிடப்பட்டு இருக்கிறது. மேலும், அம்மாநில உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூட்டத்தில் கலந்து கொண்ட புகைப்படம், சித்தி தொகுதி எம்எல்ஏ கேதார்நாத் சுக்லா அருகே இருக்கும் புகைப்படம் மற்றும் பாஜக கூட்டங்களில் கலந்து கொண்ட பல்வேறு புகைப்படங்கள் கிடைத்தன. இதன் மூலம் பிரவேஷ் சுக்லா பாஜகவைச் சேர்ந்தவர் என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.




மேலும், கைது செய்யப்பட்ட நபர் தன்னுடைய பிரதிநிதி இல்லை என எம்எல்ஏ கேதார்நாத் மறுப்பு தெரிவித்த நிலையில், பிரவேஷ் சுக்லாவின் தந்தை ராமகாந்த் சுக்லா அளித்த பேட்டியில், " எனது மகன் பாஜக எம்எல்ஏவின் பிரதிநிதி. அதனால்தான் எதிர்க்கட்சிகளால் குறிவைக்கப்படுகிறார் " எனப் பேசியது தொடர்பாக வீடியோ மற்றும் இந்தியா டுடே செய்தியில் வெளியாகி இருக்கிறது.

.

முடிவு : 

.

நம் தேடலில், மத்தியப் பிரதேசத்தில் பழங்குடியினத்தைச் சேர்ந்த இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் குறித்த பதிவில், எதிர்க்கட்சிகள் கூறுவது போல் அவர் பாஜக உறுப்பினர் அல்ல என குஷ்பு கூறிய தகவல் பொய்யானது. இந்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பிரவேஷ் சுக்லா பாஜக உறுப்பினர் என்பதை அறிய முடிகிறது. 

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

தவறானது

சமூகநீதி விடுதிகளில் ஒரு முதல்வர் வந்து பேசுவது தவெக ஆட்சியில் தான் முதன்முறை நடந்துள்ளதா? அமைச்சர் வன்னியரசு பரப்பும் பொய் செய்தி!

இதற்கு முன்பே முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் திருவாரூர் அருகே உள்ளே கிடாரங்கொண்டானில் அமைந்துள்ள கல்லூரி மாணவர்களுக்கான சமூகநீதி விடுதி மற்றும் கல்லூரி மாணவிய…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க