YouTurn

நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் சிக்கியதாகத் தவறாகப் பரவும் ம.பி ஹனி ட்ராப் வழக்கு வீடியோ !

நாஞ்சில் சம்பத் இளம்பெண்ணுடன் சிக்கியதாகத் தவறாகப் பரவும் ம.பி ஹனி ட்ராப் வழக்கு வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

உறவுகளுக்கு வணக்கம் இந்த நாஞ்சில் சம்பத் விடாதீர்கள் விரட்டி விரட்டி இந்த காணொளியை பாருங்கள்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

திமுகவைச் சேர்ந்த நாஞ்சில் சம்பத் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி 1:25 நிமிடங்கள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் ஒரு ஆணும், பெண்ணும் மதுவிருந்திவிட்டு நெருக்கமாக இருப்பது போன்றும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.





உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்த வீடியோவில் இருப்பவர் நாஞ்சில் சம்பத் அல்ல என்பதை அறிய முடிந்தது. மேலும் இது கடந்த 2019-ல் இருந்தே சமூக ஊடகங்களில் பரவி வந்துள்ளது. இது குறித்து நாஞ்சில் சம்பத் அப்போதே தனது எதிர்ப்பை தெரிவித்திருந்தார்.



பரவி வரும் வீடியோ மத்தியப் பிரதேச ஊடகங்களிலும் கடந்த 2019 லிருந்தே வைரலாகப் பரவி வந்துள்ளதைக் காண முடிந்தது. இது குறித்து TNI The News india ஊடகம் தனது யூடியூப் பக்கத்தில் கடந்த 2019 ஜூலை 29 அன்று "மத்திய பிரதேசத்தின் ஐஏஎஸ் அதிகாரியின் ஆபாச வீடியோ வைரலாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது" என்ற தலைப்பில் செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தது. மேலும் அதில், இது கமல்நாத் ஆட்சியில், மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த கூடுதல் தலைமைச் செயலாளர் (Additional Chief Secretary ) ஒருவரோடு தொடர்புடைய வீடியோ என்றுள்ளது.



மேலும் International Human Rights & Anti Crime Organisation Telangan என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் சில புகைப்படங்களைக் குறிப்பிட்டு கடந்த 2019 செப்டம்பர் 22ம் தேதி ஒரு பதிவு வெளியிடப்பட்டிருந்தது. அதிலும் மத்தியப்பிரதேச கூடுதல் தலைமைச் செயலாளர் ஒருவருடன் தொடர்புடைய வீடியோ என்றேக் குறிப்பிடப்பட்டிருந்தது.



எனவே இது குறித்து மேலும் ஆய்வு செய்து பார்த்தோம். கடந்த 2019-லிருந்து இன்று வரை மத்தியப்பிரதேசத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் வழக்கான, 'மத்தியபிரதேச ஹனிட்ராப் வழக்கு 2019' உடன் இந்த வீடியோ தொடர்புடையது என்பதையும், இதுகுறித்து NDTV ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியையும் காண முடிந்தது.



மேலும் அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் பொறுப்பிலுள்ள சில அரசு அதிகாரிகளை குறி வைத்து ஒரு கும்பல், ஆபாச வீடியோக்களை வெளியிட்டுள்ளது தொடர்பாக Economic times ஊடகமும் கடந்த 2019ல் செய்தி வெளியிட்டிருந்தது. அதில் "கடந்த 10 நாட்களில் மட்டும் இரண்டு முறை சிறப்பு புலனாய்வு குழுவின் ( எஸ்ஐடி ) தலைவரை முதலமைச்சர் கமல்நாத் மாற்றியுள்ளார். இது தொடார்பாக 5 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்." என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் படிக்க: உங்கள் ஆபாச புகைப்படத்தை வெளியிடுவேன் என மிரட்டப்படுகிறீர்களா ? இனி கவலையில்லை, இதை செய்யுங்கள் !

முடிவு:

நம் தேடலில், நாஞ்சில் சம்பத் ஒரு பெண்ணுடன் நெருக்கமாக இருப்பதாகக் கூறி கடந்த 2019-ல் இருந்தே பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதையும், இது மத்தியப்பிரதேச அரசு அதிகாரி ஒருவருடன் தொடர்புடைய வீடியோ என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க