யூடர்ன் தீர்ப்பு
YouTurn Verdict
சரிபார்க்கப்பட்ட கூற்று
வீடியோ quality குறைவாக இருப்பதால் தூரத்தில் உள்ள மக்கள் தெரியவில்லை.
பரவிய செய்தி
விரிவான விளக்கம்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மக்கள் யாரும் இல்லாத இடத்தை பார்த்து கை அசைத்ததாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.
உண்மை என்ன?
பரவக்கூடிய இதே வீடியோ, 2021 ஏப்ரல் 1ஆம் தேதி ‘Rohan Dua’ என்ற பத்திரிகையாளரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அதில், ’ஜெய்நகர் (Jaynagar) மேற்கு வங்காளம்’ எனக் குறிப்பிட்டுள்ளார். இதே வீடியோவை பாஜக-வின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் அதே தேதியில் பதிவிட்டுள்ளது.
பரவக்கூடிய வீடியோவைக் காட்டிலும் இந்த வீடியோ நல்ல quality-ல் உள்ளது. அதில், தூரத்தில் மக்கள் இருப்பதையும் மோடி கை அசைக்கும்போது அவர்கள் சத்தமிடுவதையும் காணவும் கேட்கவும் முடிகிறது.
மேற்கு வங்க மாநில சட்டமன்ற தேர்தல் 2021ஆம் ஆண்டு நடைபெற்றது. தேர்தலுக்கு முன்பாக பிரதமர் மோடி அம்மாநிலத்தில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அப்படி ஜெய்நகர் பகுதியில் நடந்த பிரச்சாரத்திற்கு வருகை தந்தபோது எடுத்ததுதான். தற்போது பரவக்கூடிய வீடியோ Quality குறைவாக உள்ள வீடியோவில் தூரத்தில் நின்றுள்ள மக்கள் தெரியவில்லை. எனவே, யாரும் இல்லாத இடத்தில் கூட மோடி கை அசைக்கிறார் எனத் தவறானத் தகவலைப் பரப்புகின்றனர்.
ஜெய்நகர் பகுதியில் நடந்த பிரச்சாரத்தில் மோடி பேசிய முழு வீடியோ அவரது யூடியூப் பக்கத்தில் உள்ளது. அந்நிகழ்ச்சியில் திரளாக மக்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இதற்கு முன்னரும் மோடி குறித்து இதே மாதிரியான பொய் செய்திகள் பரப்பப்பட்டன. அதுகுறித்த உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !
மேலும் படிக்க: யாரும் இல்லாத இடத்தை பார்த்து மோடி கையசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!
முடிவு:
யாரும் இல்லாத இடத்தைப் பார்த்து பிரதமர் மோடி கை அசைப்பதாகப் பரவும் வீடியோ குறித்த தகவல் தவறானது. அந்த வீடியோவில் தூரத்தில் மக்கள் நின்று கொண்டுள்ளனர். வீடியோ quality குறைவாக இருப்பதால் மக்கள் தெரியவில்லை.
