YouTurn

யாரும் இல்லாத இடத்தை பார்த்து மோடி கையசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

யாரும் இல்லாத இடத்தை பார்த்து மோடி கையசைப்பதாகப் பரவும் தவறான தகவல்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

ஹாய் மீன்களே !

X link 

விரிவான விளக்கம்

பிரதமர் நரேந்திர மோடி பாலத்தின் மேல் நின்று கொண்டு யாரும் இல்லாத இடத்தில் கையசைப்பதாக வீடியோ ஒன்றை திமுக ஆதரவாளர்களால் சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது.





உண்மை என்ன ? 

பரவக் கூடிய வீடியோவின் கீஃப்ரேம்களை கொண்டு கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், இதே வீடியோ 'ANI' எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. 2024, பிப்ரவரி 25ம் தேதி பதிவிட்டுள்ள அந்த வீடியோ ஓகா மற்றும் பேட் துவாரகா பகுதியை இணைக்கும் சுதர்சன் சேது திட்டத்தைப் பிரதமர் மோடி தொடங்கி வைத்த போது எடுக்கப்பட்டது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 



குஜராத்தில் உள்ள ஓகா நிலப்பரப்பையும் துவாரகா தீவையும் இணைக்கும் வகையில் 2.32 கி.மீ. நீளமுள்ள சுதர்சன் சேது கேபிள் பாலத்தைப் பிரதமர் மோடி கடந்த  25ம் தேதி திறந்து வைத்தார். சுமார் 980 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இப்பால திறப்பு விழாவில் குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் உள்ளிட பலர் கலந்து கொண்டனர். 



திறப்பு விழாவின் போது எடுக்கப்பட்ட வீடியோ நரேந்திர மோடியின் யூடியூப் பக்கத்திலும் பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோக்களில் பாலத்தின் மேல் நின்று கொண்டு மோடி கையசைக்கும் போது தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதையும், அவர்கள் பூக்களை வீசுவதையும் காண முடிகிறது. அம்மக்களை பார்த்துத்தான் மோடி கையசைத்துள்ளார். அந்த வீடியோவை மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைத்ததாகத் தவறாகப் பரப்புகின்றனர்.

மேலும் படிக்க : குடியரசுத் தலைவர், துணைத் தலைவர் வணக்கம் சொல்லும்போது பிரதமர் மோடி கண்டு கொள்ளவில்லை எனப் பரவும் தவறான தகவல் !

இதேபோல் பிரதமர் மோடி குறித்துப் பரப்பப்பட்ட பல்வேறு போலி செய்திகள் பற்றிய உண்மைகளும் யூடர்னில் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : யாருமில்லாத நடுவானில் கை அசைத்த பிரதமர் மோடி எனத் தவறாகப் பரவும் வீடியோ !

முடிவு: 

பிரதமர் மோடி யாரும் இல்லாத இடத்தில் கையசைப்பதாகப் பரவும் வீடியோ தவறானது. சுதர்சன் சேது பாலத்தின் மீது இருந்து மோடி கையசைக்கையில் தூரத்தில் உள்ள படகுகளில் மக்கள் இருப்பதைக் காண முடிகிறது. 
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க