YouTurn

பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து ஸ்நோர்கெலிங் செய்வதாகப் பரவும் தவறான செய்திகள் !

பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து ஸ்நோர்கெலிங் செய்வதாகப் பரவும் தவறான செய்திகள் !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

பரவிய செய்தி

Life jacket எதுக்கு ? தண்ணிக்குள்ள மூழ்காம இருக்க .. Snorkel எதுக்கு? தண்ணிக்குள்ள மூழ்கி, மூச்சு விட .. இப்போ இரண்டையும் போட்டு மூழ்க போறியா இல்ல மிதக்கப் போறியா?இரண்டும் இல்லை, ச்சும்மா போட்டோஷூட் க்கு போஸ் மட்டும் குடுக்கப் போறேன்..



Twitter Link

விரிவான விளக்கம்

சமீபத்தில் பிரதமர் நரேந்திரமோடி லட்சத்தீவில் 1,150 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக சென்றிருந்தார். அப்போது லட்சத்தீவில் பல்வேறு இடங்களுக்கு அவர் சென்றிருப்பது குறித்து புகைப்படங்களை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்நிலையில் லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஒருவரால் எப்படி ஸ்கூபா டைவிங்கோ (Scuba diving), ஸ்நோர்கெலிங்கோ (Snorkelling) செய்யமுடியும் என்று கூறி, பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் உடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது.





உண்மை என்ன?

பரவி வரும் செய்திகள் குறித்து பிரதமர் மோடியின் எக்ஸ் பக்கத்தில் ஆய்வு செய்து பார்த்ததில், கடந்த ஜனவரி 04 அன்று "சாகசங்களை அரவணைக்க விரும்புவோர், உங்கள் பட்டியலில் லட்சத்தீவை இணைத்துக் கொள்ளுங்கள். நான் அங்கு தங்கியிருந்த காலத்தில், ஸ்நோர்கெல்லிங் முயற்சித்தேன் - என்ன ஒரு உற்சாகமான அனுபவம் !" என்று குறிப்பிட்டு பல புகைப்படங்களை பதிவு செய்திருந்தார். 



இதன் மூலம் அவர் ஸ்கூபா டைவிங் மேற்கொள்ளவில்லை என்பதையும், ஸ்நோர்கெலிங் தான் முயற்சித்துள்ளார் என்பதையும் அறிய முடிகிறது.



மேலும் ஸ்நோர்கெலிங் குறித்து ஆய்வு செய்து பார்த்ததில், ஸ்நோர்கெலிங்கிங் செய்யும் போது Snorkel vest அணிந்துகொள்வார்கள் என்பதை அறிய முடிந்தது. இது பார்க்க லைஃப் ஜாக்கெட் போன்று இருந்தாலும், snorkel vest அணியும் போது தலை தண்ணீரில் மூழ்குமாறு Bib மற்றும் Head loop ஆகிய அமைப்புகளுடன் சேர்த்து வடிவமைக்கப்பட்டிருக்கும். ஆனால் லைஃப் ஜாக்கெட் அணியும் போது தலை தண்ணீருக்குள் மூழ்காது. இரண்டு ஆடைகளுக்கும் உள்ள வேறுபாட்டை கீழே உள்ள வீடியோவின் மூலமும் நன்கு அறிந்து கொள்ளலாம்.



மேலும் பிரதமர் மோடி ஸ்நோர்கெலிங்கிங் செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோவில், அவருடைய தலை தண்ணீருக்குள் மூழ்கியிருப்பதையும் நன்கு பார்க்க முடிகிறது.



முடிவு:

நம் தேடலில், பிரதமர் மோடி லைஃப் ஜாக்கெட் அணிந்து கொண்டு ஸ்நோர்கெலிங்கிங் செய்வதாகப் பரவும் செய்திகள் தவறானவை என்பதையும், அவர் அணிந்திருப்பது Snorkel vest என்பதையும் அறிய முடிகிறது.

ஆதாரங்கள்

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க