YouTurn

கார்கே பேசும் போது 'மோடி மோடி' என்று மக்கள் கூச்சலிடுவதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

கார்கே பேசும் போது 'மோடி மோடி' என்று மக்கள் கூச்சலிடுவதாகப் பரவும் எடிட் செய்யப்பட்ட வீடியோ !

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

பரவிய செய்தி

பாவம் கார்கே.. அவர் பேசும்போது மோடி மோடி என்று கூவி அவரை பதற்றமடைய செய்கிறார்கள்..

X Link | Archive Link

விரிவான விளக்கம்

ந்திய தேசிய காங்கிரஸின் தலைவரான மல்லிகார்ஜுன கார்கே மேடை ஒன்றில் பேசும் போது, மக்கள் மோடி மோடி என்று கூச்சலிடுவதைப் பாருங்கள் என்று கூறி 28 வினாடிகள் கொண்ட வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பாஜகவினரால் வைரலாகப் பரப்பப்படுகிறது. 

மேலும் அந்த வீடியோவில் கார்கே ஹிந்தியில் பேசியுள்ளதால், தமிழில் மொழி பெயர்த்து பார்த்தோம். அதில், "நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால் அமைதியாக உட்காருங்கள், அல்லது வெளியேறுங்கள். வாய்க்கு வந்ததைச் சொல்கிறீர்கள். நீங்கள் விரும்பினால் கேளுங்கள், இல்லையெனில் உங்கள் வழியில் செல்லுங்கள்." என்று கார்கே பேசியுள்ளதையும் கேட்க முடிகிறது.





உண்மை என்ன ?

பரவி வரும் வீடியோவின் கீபிரேம்களை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் செர்ச் மூலம் ஆய்வு செய்து பார்த்ததில், இந்திய தேசிய காங்கிரஸின் யூடியூப் பக்கத்தில் கடந்த 2023 நவம்பர் 26 அன்று மல்லிகார்ஜுன கார்கே தெலுங்கானாவின் கல்வகுர்த்தி (Kalwakurthy) தொகுதியில் பேசிய வீடியோவின் ஒரு பகுதி தான் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது என்பதை அறிய முடிந்தது.

சரியாக அவ்வீடியோவின் 20:39 நிமிடத்தில், கார்கே பேசும் போது பார்வையாளர்களில் சிலர் கூச்சலிடுகின்றனர். எனவே 21:05 நிமிடத்தில் பேசிய கார்கே "அமைதியாக உட்காருங்கள், நீங்கள் கேட்க விரும்பவில்லை என்றால், வெளியேறுங்கள். இப்படி பேசிக்கொண்டு இருக்காதீர்கள். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுவது உங்களுக்குத் தெரியவில்லையா? வாய்க்கு வந்ததைச் பேசுகிறீர்கள். வேண்டுமானால் கேளுங்கள், இல்லையென்றால் போய்விடுங்கள்" என்று பேசியுள்ளதைக் காண முடிகிறது. ஆனால் இந்த வீடியோவின் எந்த இடத்திலும் மக்கள் மோடி, மோடி என்று கூச்சலிடவில்லை.



இதே போன்று "காங்கிரஸ் கார்கே பொறுமையை இழக்கிறார்' என்ற தலைப்பில் TIMES NOW இது தொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவிலும், எந்த இடத்திலும் மக்கள் மோடி என்று கூச்சலிடவில்லை என்பதை உறுதி செய்ய முடிகிறது.



எனவே உண்மையான வீடியோவின் ஒரு பகுதியை மட்டும் எடுத்து, கார்கே பேசும் போது மக்கள் மோடி, மோடி என்று கூச்சலிடுவதைப் போன்று எடிட் செய்து சிலர் தவறாக சமூக ஊடகங்களில் பரப்பி வருகிறனர்.

மேலும் படிக்க: முஸ்லீம் பகுதிகளுக்கு செல்வதற்கு முன் கார்கே நெற்றியில் உள்ள திலகத்தை அழிப்பதாகப் பொய் பரப்பும் துக்ளக் குருமூர்த்தி !

முடிவு:

நம் தேடலில், கார்கே பேசும்போது மோடி மோடி என்று மக்கள் கூச்சலிடுவதாகப் பரவும் வீடியோ, போலியாக எடிட் செய்யப்பட்டது என்பதை அறிய முடிகிறது.
பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க