YouTurn

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பும் அதிமுகவினர்!

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை தமிழ்நாட்டில் நடந்தது போல் பரப்பும் அதிமுகவினர்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை "தமிழ்நாட்டில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைக் கட்டி வைத்த கும்பல்" என்று கூறி பலரும் தவறாகப் பரப்பி வருகின்றனர்.

பரவிய செய்தி

கந்து வட்டி கொடுமையா???? கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியை கட்டி வைத்த கும்பல்...

@tn_factcheck எந்த ஊர் என்று கண்டுபிடித்து சொல்லு... #திராவிட_மாடல் #திமுக_கேடு_தரும் #ADMK_TNJ

image.png

X Link | Archived Link

விரிவான விளக்கம்

கணவன் வாங்கிய கடனுக்காக இளம்பெண்ணை மரத்தில் கட்டிவைத்து கொடுமை என்று 1 நிமிடம் 2 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் ஒரு பெண்ணை மரத்தில் கட்டி வைத்து, சுற்றி இருக்கும் பெண்கள் தாக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. 


உண்மை என்ன?

பரவி வரும் வீடியோவை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் மூலம் தேடிப் பார்த்தோம். அப்போது ”Woman tied to tree, assaulted over loan repayment in AP's Chittoor; CM Naidu orders strict action” என்ற தலைப்பில் New Indian Express ஊடகம் வெளியிட்ட செய்தி ஒன்றை பார்க்க முடிந்தது. அதில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் திம்மராயப்பா என்ற நபர் வாங்கிய கடனுக்காக அவரது மனைவி சிரிஷா என்பவரை மரத்தில் கட்டி வைத்து துன்புறுத்தியுள்ளனர் என்றும், சம்பவத்தை தங்கள் தொலைபேசிகளில் பதிவு செய்ய முயன்ற கிராம மக்களையும் அவர்கள் தாக்கியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

image.png

இக்குற்றச்செயலில் ஈடுபட்டவர்களை ஆந்திர மாநில காவல்துறை கைது செய்துள்ளது என்றும்,  குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அம்மாநில முதலமைச்சரும் உறுதியளித்துள்ளார் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதே போல் பாதிக்கப்பட்ட அப்பெண்ணுக்கு ரூ.5 லட்சம் உதவித் தொகையையும், அவரது குழந்தைகளின் கல்விக்கு அரசாங்கம் பொறுப்பேற்கும் என்றும் அம்மாநில முதலமைச்சர் உறுதியளித்துள்ளார்.


மேலும் இது குறித்து தேடிய போது புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்ட செய்தியை பார்க்கமுடிந்தது. அதில் கணவன் வாங்கிய ரூ. 80 ஆயிரம் பணத்தை வட்டியுடன் உடனடியாக திருப்பிக்கொடுக்க வேண்டும் என்று அவரது மனைவியை முனிகண்ணப்பா என்ற நபர் மரத்தில் கட்டி வைத்து மிரட்டியதாகவும், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் சொந்தத் தொகுதியான குப்பத்தில் நடந்த இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

image.png


இந்த சம்பவம் குறித்து NDTV, நக்கீரன், விகடன் போன்ற ஊடகங்களிலும் இது குறித்து செய்தி வெளியிடப்பட்டுள்ளது. 

image.png


முடிவு: 

ஆந்திராவில் நடந்த சம்பவத்தை "தமிழ்நாட்டில் கணவன் வாங்கிய கடனுக்கு மனைவியைக் கட்டி வைத்த கும்பல்" என்று கூறி அதிமுகவினர் தவறாகப் பரப்பி வருகின்றனர்.  

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.

பொய்

தமிழ்நாட்டில் Jio நிறுவனத்தின் சேவைகளை தடை செய்வதாக எச்சரித்தாரா முதல்வர் விஜய்?

ஜியோ (Jio) நிறுவனம் கட்டணத்தை உயர்த்தினால் அது தமிழ்நாட்டில் முடக்கப்படும் என்று முதல்வர் விஜய் பேசியதாக எந்தவித அதிகாரப்பூர்வ தகவலோ செய்தியோ வெளியாகவில்லை.

தவறானது

ஆண்கள், பெண்கள் FIFA World Cup பட்டங்களை வென்ற உலகின் முதல் நாடா 'ஸ்பெயின்'? தந்திடிவி வெளியிட்ட திரிக்கப்பட்ட செய்தி!

1954ல் hungary நாட்டை வீழ்த்தி west germany அணி சாம்பியன் பட்டத்தை வென்றிருந்ததை பார்க்கமுடிந்தது. அதே போல் 2003-ஆம் ஆண்டு அக்டோபர் 12-ஆம் தேதி, ஜெர்மனி முதன்ம…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க