YouTurn

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

தனது பாஸ்போர்ட் முடக்கப்பட்டதால் போலீஸ் காலில் விழுந்து கெஞ்சினாரா CJP தலைவர் அபிஜீத் தீப்கே?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு டெல்லி போலீஸ் காலில் விழுந்து அபிஜீத் தீப்கே கெஞ்சிய போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

டெல்லி ஜந்தர் மந்தரில் தேசவிரோதிகளை கண்டறிந்து அவர்களது பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அறிவிப்பு தொடர்ந்து...

மண்டியிட்டு கதறினான் கரப்பான் பூச்சி அபிஜித் தீப்கே.. 


image.png


X Link / Archive Link 


விரிவான விளக்கம்

பாஜக ஆட்சியில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் வினாத்தாள் கசிந்தது போன்ற குளறுபடிகளை கண்டித்து ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) போராட்டம் நடத்தியது.  ஜுலை 20ஆம் தேதி போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற நோக்கி பேரணி செல்ல முற்பட்டதை தொடர்ந்து டெல்லி போலீஸ் போராட்டக்காரர்கள் மீது மூர்க்கமாக தடியடி நடத்தியது.


இந்நிலையில், இந்த போராட்டத்தில் கலந்துகொண்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று டெல்லி போலீஸ் அறிவித்ததாகவும், இந்த அறிவிப்பை திரும்பப் பெறுமாறு கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே டெல்லி போலீஸாரின் காலில் விழுந்து கெஞ்சியதாக வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் அதிமுகவைச் சேர்ந்தவரால் பரப்பப்படுகிறது.



உண்மை என்ன?


பரப்பப்படும் இந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடுகையில், ’The Hindu’ ஊடகத்தின் யூட்யூப் தளத்தில் இந்த வீடியோ இருப்பதைக் காணமுடிந்தது.





அதில், ’டெல்லி ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் (Tent) அமைக்க அனுமதிக்குமாறு கேட்டு டெல்லி போலீஸிடம் அபிஜீத் தீப்கே கெஞ்சியதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


image.png

அதேபோல், ’ABP Live’ செய்தித்தளத்தில் இது குறித்து வெளியிடப்பட்டுள்ளது செய்தியில், ‘உண்ணாவிரதம் மேற்கொள்ளும் மாணவர்களுக்கு கூடாரங்கள் அமைக்கும் பொருட்டு ஜந்தர் மந்தருக்குள் தார்பாய்களை எடுத்து வந்த மாணவிகளை ஆண் போலீஸார் தடுத்து நிறுத்தி தள்ளி விட்டதாகவும், அவர்களை தார்பாய்களைக் கொண்டு கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு அபிஜீத் தீப்கே போலீஸாரின் காலில் விழுந்து கேட்டதாகவும்’ குறிப்பிடப்பட்டுள்ளது. 



மேலும், கூடாரங்கள் அமைக்க அனுமதிக்குமாறு போலீஸார் காலில் விழுந்து கெஞ்சிய வீடியோவை சமூக வலைத்தளத்தில் இருந்து இந்திய அரசு நீக்கியுள்ளதாகவும் அபிஜீத் தீப்கே தனது சமூக வலைத்தள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதைக் காணமுடிகிறது.



கூடுதலாக ‘ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொண்ட கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினரின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று எந்த முடிவும் டெல்லி போலீஸால் எடுக்கப்படவில்லை’ என்று கடந்த ஜூலை 23ஆம் தேதி டெல்லி போலீஸ் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ளதையும் காணமுடிகிறது.


முடிவு:


நீட் தேர்வு தொடர்பாக ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களின் பாஸ்போர்ட் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் அபிஜீத் தீப்கே போலீஸ் காலில் விழுந்து கெஞ்சியதாக திரிக்கப்பட்ட தவறான தகவல் பரப்பப்படுகிறது. 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

ஜந்தர் மந்தர் போராட்டத்தில் போலீஸ் தாக்குதலால் மாணவி உயிரிழந்தாரா? பரப்பப்படும் போலியான புகைப்படம்!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மாணவி இறந்துவிட்டதாக AI தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்ட போலியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் தவறாக பரப்பிவருகிற…

பொய்

'அசாம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட மக்களின் நிலை' என்று பரவும் வீடியோ! உண்மை இது தான்!

அஸ்ஸாமில் வெள்ளம் ஏற்பட்ட தேதியையும், இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ள தேதியும் ஒரு நாளா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது பிபிசி ஊடகத்தின் செய்தியின்படி பார்க்கைய…

பொய்

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறு…

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க