YouTurn

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

ஜந்தர் மந்தர் போராட்டம் குறித்து இராணுவ தளபதி வீடியோ வெளியிட்டுள்ளாரா?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் போலியான வீடியோ பரப்பப்படுகிறது.

பரவிய செய்தி

ஜந்தர் மந்தர் போராட்டங்களைத் தொடர்ந்து, இந்திய முப்படைத் தலைமைத் தளபதி ராஜா சுப்ரமணி அவசரகால எச்சரிக்கை விடுத்துள்ளார். "ஜந்தர் மந்தரில் தங்கள் குழந்தைகள் கொடூரமாகத் தாக்கப்பட்டதைக் கண்டித்து, 30,000-க்கும் மேற்பட்ட வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்." 



விரிவான விளக்கம்

இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து ஜூலை 20ஆம் தேதியன்று ஜந்தர் மந்தரில் இருந்து நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்தனர். அப்போது அவர்கள் மீது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் கடுமையாக தடியடி நடத்தினர்.  லத்திக் கம்புகளில் ஆணிகளை பதித்து வைத்திருந்தார்கள், பெல்லட் குண்டுகளால் போராட்டக்காரர்களை தாக்கினார்கள், மின்சார லத்திகளைக் கொண்டு தாக்கினார்கள் என்று டெல்லி போலீஸ் மீதும் துணை இராணுவப் படையினர் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தது.


இந்நிலையில், ’ஜந்தர் மந்தர் போராட்டத்தில் ஈடுபட்ட தங்களது குழந்தைகள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதலை கண்டித்து 30,000-க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்’ என்று இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. 



உண்மை என்ன?


பரப்பப்படும் வீடியோவின் Keyframe-களைக் கொண்டு தேடுகையில் ’Discover Northeast’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



கடந்த ஜூலை 22ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ’ஜூலை 25ஆம் தேதி இந்தியாவில் பிரசித்திபெற்ற 135-வது இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி தொடங்கவுள்ளது பற்றியும், அந்த இந்திய ஆயில் டுராண்ட் கோப்பையின் சிறப்புகள் பற்றியும் தான்’ இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசுயிருக்கிறார் என்பதைக் காணமுடிகிறது.



மேலும், ’Press Information Bureau’ இது குறித்து ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில், ’இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து பேசிய வீடியோவை,  செயற்கை நுண்ணிறவு (AI) தொழில்நுட்பத்தைக் கொண்டு Edit செய்து ஜந்தர் மந்தர் போராட்டத்தில் மாணவர்கள் மீது தடியடி நடத்தப்பட்டதைக் கண்டித்து இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறுவது போன்று போலியான வீடியோ பரப்பப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது.


இதிலிருந்து பரப்பப்படும் இந்த வீடியோ Edit செய்து உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது தெரியவருகிறது. 


முடிவு:


இந்திய ஆயில் டுராண்ட் கோப்பை கால்பந்து போட்டி குறித்து இராணுவத் தளபதி ராஜா சுப்பிரமணி பேசிய வீடியோவை Edit செய்து, இராணுவ வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறும் போலியான வீடியோ பரப்பப்படுகிறது. 

பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்ட வீடியோ? தவறாக வெளியிட்ட ‘இந்து தமிழ் திசை’!

சமீபத்தில் ஜம்மூ காஷ்மீரில் வெள்ளம் ஏற்பட்ட போது எடுக்கப்பட்ட வீடியோவை தற்போது அசாம் வெள்ளப் பெருக்கின் போது எடுக்கப்பட்டதாக ‘இந்து தமிழ் திசை’ பத்திரிகை தவறாக…

பொய்

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்துகிறதா தவெக அரசு? ’One India’ ஊடகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வமற்ற செய்தி!

மகளிர் உரிமைத்தொகையை 2500 ரூபாயாக உயர்த்தி வழங்கிவது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தமிழ்நாடு அரசு வெளியிடவில்லை. ’OneIndia தமிழ்’ ஊடகம் ஆதாரப்ப…

பொய்

மயிலாடுதுறை மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் நிறத்தை தீட்டவிடாமல் தடுத்தார்களா முஸ்லிம்கள்?

கடந்த 2023ஆம் ஆண்டிலே மயிலாடுதுறை நகரத்தின் கடைவீதியில் உள்ள மணிக்கூண்டிற்கு தேசியக்கொடியின் மூவர்ண நிறம் பூசப்பட்டுவிட்டது.

சமீபத்திய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க