YouTurn

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

’ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்பப்படும் பழைய வீடியோக்கள்!

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

பொய்

சரிபார்க்கப்பட்ட கூற்று

2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழுத பழைய வீடியோவையும் தற்போது வெளிவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்புகிறார்கள்.

பரவிய செய்தி

Claim 1: அண்ணனின் #jananayagan படம் பார்க்க வந்தார் அண்ணி சங்கீதா. 


X Link / Archive Link


X Link / Archive Link  


YouTube Link 


Claim 2:


ஜனநாயகன் படம் பார்த்துட்டு வைகோ கண்ணீர் விட்டு அழுத காட்சி!



விரிவான விளக்கம்

நடிகர் விஜய்-ன் கடைசி திரைப்படமான ‘ஜனநாயகன்’ கடந்த ஜனவரி மாதம் தைப் பொங்கல் நேரத்திலே வெளிவர இருந்தது. ஆனால் தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்க மறுத்த பிரச்சினை காரணமாக தள்ளி வைக்கப்பட்டு, தற்போது ஜூலை 23ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.


இந்நிலையில், முதல்வர் விஜய்-க்கும் அவரது மனைவி சங்கீதா அவர்களுக்கும் விவாகரத்து பிரச்சினை நடந்து கொண்டிருக்கும் தற்போதைய நிலையில், சங்கீதா ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்க்க திரையரங்கத்திற்கு வந்ததாகவும்; மதிமுக தலைவர் வைகோ ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை பார்த்துவிட்டு பத்திரிகையாளர்கள் முன்னிலையில் அழுததாகவும் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் பரப்பப்படுகின்றது. 




உண்மை என்ன? 


Claim 1: நடிகர் விஜய் மனைவி சங்கீதா திரையரங்க வாயிலில் காரில் வந்து இறங்கும் அந்த வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடிய போது, ’News தமிழ்’ செய்தித் தொலைக்காட்சியின் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது.





2023 ஜூலை 14ஆம் தேதி வெளியிடப்பட்டிருந்த அந்த செய்தியில், ’நடிகர் விஜய் மனைவி சங்கீதா சென்னையில் உள்ள வெற்றி திரையரங்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த ‘மாவீரன்’ திரைப்படம் காண வந்ததாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து நடிகர் விஜய்-ன் மனைவி சங்கீதா திரையரங்கத்திற்கு படம் பார்க்க வந்த இந்த வீடியோ மூன்றாண்டுகளுக்கு முன்னர் 2023-ல் எடுக்கப்பட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது. 


Claim 2: ஊடகங்கள் முன்பு மதிமுக தலைவர் வைகோ அழுத வீடியோவின் Keyframe-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ’தினமலர்’ செய்தித்தளத்தின் யூட்யூப் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



2018 ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டுள்ள அந்த வீடியோவில், ’தமிழ்நாட்டில் ஸ்டெர்லைட், நியூட்ரினோ போன்ற திட்டங்களுக்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், வைகோவும் அவரது குடும்பத்தினரும் பணம் வாங்கிக்கொண்டு இந்த திட்டத்திற்கான எதிர்ப்பை மழுங்கடித்ததாக நாம் தமிழர் கட்சியினரும் சீமானும் கூறி வந்ததாகவும், அதனால் வைகோவின்  உறவினர் சரவண சுரேஷ் என்பவர் தீக்குளித்ததாகவும் சொல்லி பத்திரியாளர்கள் முன்னிலையில் வைகோ அழுதார்’ என்பதை தெளிவாகக் காணமுடிகிறது.


இதிலிருந்து பத்திரியாளர்கள் முன்னிலையில் வைகோ அழும் இந்த வீடியோ 8 ஆண்டுகளுக்கு முன்னால் 2018-ல் எடுக்கப்பட்டது என்பது தெளிவாககிறது. 


முடிவு:


2023ஆம் ஆண்டு ‘மாவீரன்’ திரைப்படம் பார்க்க வந்த சங்கீதாவின் பழைய வீடியோவையும், 2018ஆம் ஆண்டு அவரது உறவினர் தீக்குளித்தது பற்றிய செய்தியாளர் சந்திப்பில் வைகோ அழுத பழைய வீடியோவையும் தற்போது வெளிவான ‘ஜனநாயகன்’ திரைப்படத்துடன் தொடர்புபடுத்தி தவறாக பரப்புகிறார்கள்.


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

CJP-ன் இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்கள் பாகிஸ்தானியர்களா?

CJP-யின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தை பின்தொடர்பவர்களில் 94.7% பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா 1%, ஐக்கிய இராச்சியம் (UK) 0.…

பொய்

டெல்லி மாணவர்கள் போராட்டத்தை ஆதரிப்பாக ‘வங்கதேச ஜமாஅத்-இ-இஸ்லாமி’ கட்சி அறிக்கை வெளியிட்டதா?

‘வங்கதேச ஜமாத்-இ-இஸ்லாமி’ பெயரில் பரப்பப்படும் இந்த அறிக்கை போலியாக உருவாக்கப்பட்டது என்று அக்கட்சி அதிகாரப்பூர்வமாக விளக்கமளித்துள்ளது.

பொய்

ஹைட்ரஜன் ரயில் மீது கரப்பான் பூச்சி கட்சியினர் கல் வீசியதாக பொய் பரப்பும் பாஜகவினர்!

பீகார் காவல்துறை பணிக்கான தேர்வில் கலந்துக்கொள்ள சென்ற மாணவர்களுக்கு போதுமான ரயில் இல்லாததால் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது எடுக்கப்பட்ட பழைய வீட…