YouTurn

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

டெல்லி போராட்டத்தின் போது காருக்கு தீவைக்க முயன்றார்களா முஸ்லிம்கள்? உண்மை என்ன?

யூடர்ன் தீர்ப்பு

YouTurn Verdict

தவறானது

சரிபார்க்கப்பட்ட கூற்று

பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து மக்கள் அந்தக் காரை தீ வைத்து எரிக்க முயன்ற போது எடுக்கப்பட்ட வீடியோ இது.

பரவிய செய்தி

டெல்லியில் கரப்பான் பூச்சி நடத்தும் போராட்டத்தில் உள்ளே புகுந்து வாகனங்களுக்கு தீ வைக்க முயலும் முஸ்லிம்கள்


X Link / Archive Link 


image.png


X Link / Archive Link


விரிவான விளக்கம்

இந்தியாவில் நீட் போன்ற போட்டித் தேர்வுகளில் நடக்கும் குளறுபடிகளுக்கு பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்​திர பிர​தான் பதவி விலகவேண்டும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவர்களுக்கு 1 கோடி ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து டெல்லி ஜந்தர் மந்தரில் மாணவர்கள் இளைஞர்கள் போராடி வருகிறார்கள். இந்த போராட்டத்தை தொடக்கத்தில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (CJP) ஒருங்கிணைத்து நடத்தினாலும் தற்போது பல்வேறு இயக்கத்தை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டு போராடி வருகிறார்கள். ஜூலை 20ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தை நோக்கி இளைஞர்கள் பேரணி செல்ல முயற்சித்த போது அவர்கள் மீது டெல்லி போலீஸார் மற்றும் துணை இராணுவப்படைகள் தடியடி நடத்தினர். 


இந்நிலையில் போலீஸ் தடுப்பதையும் மீறி வாகனத்திற்கு  முஸ்லிம் ஒருவர் தீ வைக்க முயற்சிக்கும் வீடியோவை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முஸ்லிம்கள் இவ்வாறு வாகனத்திற்கு தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டதாக பரப்பி வருகிறார்கள். 




உண்மை என்ன? 


பரப்பப்படும் வீடியோவின் Key frame-களைக் கொண்டு இணையத்தில் தேடியபோது, ‘Money Control’ என்ற செய்தித்தளத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவைக் காணமுடிந்தது. 



கடந்த ஜூலை 17ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், ‘பீகார் மாநிலத்தில் சாலை விபத்து ஏற்படுத்திய கார் ஒன்றை அங்கிருந்து மக்கள் தீ வைத்து எரிக்க முயன்றதாக’  குறிப்பிடப்பட்டுள்ளது. 



அதேபோல் ‘CNN News 18’ செய்தி ஊடகத்தின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஜூலை 17ஆம் தேதி இந்த வீடியோ பதிவிடப்பட்டிருக்கிறது. அதிலும் ‘பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்தக் காரை மக்கள் தீ வைத்து எரிக்க முயன்றதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதிலிருந்து, இந்த வீடியோவில் உள்ள சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்னர் நடந்தது என்பதும் இதற்கும் டெல்லி ஜந்தர் மந்தரில் நடந்து வரும் போராட்டத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை என்பதும் தெரிய வருகிறது. 


முடிவு: 


பீகாரில் சாலை விபத்து ஏற்பட்டதைத் தொடர்ந்து காருக்கு மக்கள் தீ வைத்து எரிக்க முயன்ற வீடியோவை, டெல்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முஸ்லிம்கள் காருக்கு தீ வைக்க முயன்றதாக திரித்துப்பட்ட தவறான தகவலை மதவாத நோக்கில் பரப்பி வருகிறார்கள். 


பகிருங்கள்

தொடர்புடைய சரிபார்ப்புகள்

அனைத்தும் பார்க்க
பொய்

பதவியை ராஜினாமா செய்தாரா ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்?

ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ததாக கூறி போலியாக உருவாக்கப்பட்ட கடிதம் சமூக வலைத்தளத்தில் பரப்பப்படுகிறது.

பொய்

முதல்வர் விஜய் தெருக்குரல் அறிவை சந்தித்தாரா? ஊடகங்கள் வெளியிட்ட தவறான செய்தி!

‘ஊடகங்கள் செய்தி வெளியிட்டது போல் நான் முதல்வரை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை மட்டுமே சந்தித்தேன்’ என்று தெருக்குரல் அறிவு தெளிவுபடுத்தியுள்ளார்.

பொய்

தமிழ்வழிக் கல்வியில் பயின்றாரா சுந்தர் பிச்சை? அமைச்சர் ராஜ்மோகன் சொல்லும் தவறான தகவல்!

சுந்தர் பிச்சை சென்னையில் உள்ள ஜவகர் வித்யாலயா என்ற CBSE பள்ளியிலும், வனவாணி என்ற ஆங்கில வழிப் பள்ளியிலும் தான் படித்திருக்கிறார்.